இயக்குனர் மகேந்திரனுக்கு மரியாதை செய்யும் இளம் படைப்பாளிகள்! கோட்டைவிட்ட இயக்குனர் சங்கம் !?

 

இயக்குனர் மகேந்திரனுக்கு மரியாதை செய்யும் இளம் படைப்பாளிகள்! கோட்டைவிட்ட இயக்குனர் சங்கம் !?

நியாயமாக இது போன்ற நிகழ்ச்சியை இயக்குனர் சங்கம்தான் முன்னின்று செய்திருக்க வேண்டும்.பாவம் அவர்களுக்கு என்ன பிரச்சினையோ

இயக்குனர் மகேந்திரன் எண்ணிக்கையில் குறைவான படங்கள் பண்ணியிருந்தாலும் இந்திய சினிமாவின்  முக்கியமான அடையாளம் அவர். சினிமாவில் நல்ல படங்களை எடுக்க விரும்பும் இளம் இயக்குனர்களுக்கு இவரது படைப்புகள்தான் இன்றளவும் வழிகாட்டி.

mahendran

அப்படிப்பட்டவர் சமீபத்தில் உடல்நல குறைவு காரணமாக சமீபத்தில் காலமானார்.அவர் உடல்தான் மண்ணுக்குள் போனது;அவர் விதைத்த விதைகள் கடைசி சினிமா ரசிகன் இருக்கிறவரை முளைத்துக்கொண்டேதான் இருக்கும் என்பதற்கு இந்த செய்தி உதாரணம்.

அயல் சினிமா & Discovery Book Palace  இணைந்து ஒருங்கிணைக்கும், #இயக்குநர் மகேந்திரன் வாரம் என்ற பெயரில் தொடர் திரையிடல் நிகழ்ச்சியை ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் நடத்த விருக்கிறார்கள்.

mahendran

அந்த நிகழ்ச்சியில் மகேந்திரனையும் அவர் படைப்புகளயும் கொண்டாடும் விதமாக மகேந்திரனின் திரைப்படங்கள் வரும் திங்கள் முதல் (08/04/2019) தினமும் ஒரு திரைப்படம் டிஸ்கவரியில் திரையிடப்படவிருக்கிறது. ஒவ்வொரு திரையிடலின் போதும் அத்திரைப்படத்தைக் குறித்து ஒரு சிறப்பு விருந்தினர்  தன் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வார்.

அனைத்து திரையிடல்களும் நிறைவடைந்த பின்னர் மகேந்திரன் பற்றியும்  அவரது படைப்புகள் குறித்தும்  விரிவான ஒரு முழு நாள் கருத்தரங்கம் நடத்துவதற்கான திட்டமும் வைத்திருக்கிறார்கள். மகேந்திரனுடன் பணி புரிந்தவர்களும், மகேந்திரனை அறிந்தவர்களும், திரைக் கலைஞர்களும், பிரமுகர்களும் பங்கு பெற இருக்கின்றனர். அந்த நிகழ்வு குறித்த தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.

mullum malarum

நம் நெஞ்சோடு கலந்துவிட்ட கலைஞனை நினைவு கூர்ந்து கொண்டாடும் இந்த பெரு நிகழ்வின் துவக்கமாக வரும் 8-ஆம் தேதி திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு ‘முள்ளும் மலரும் ‘திரைப்படம்’ திரையிடப்படுகிறது.

நியாயமாக இது போன்ற நிகழ்ச்சியை இயக்குனர் சங்கம்தான் முன்னின்று செய்திருக்க வேண்டும்.பாவம் அவர்களுக்கு என்ன பிரச்சினையோ!?

இதையும் வாசிங்க

அரசியலா?, விஜய் சேதுபதி படமா?: குழப்பத்தில் ஸ்ருதி