இயக்குனர் சீனுராமசாமி கொந்தளிப்பு! கூல் குமாரராஜா !?

 

இயக்குனர் சீனுராமசாமி கொந்தளிப்பு! கூல் குமாரராஜா !?

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் ‘கண்ணே கலைமானே’உதயநிதி ஸ்டாலின்,தமன்னா நடித்துள்ள இந்தப் படம் சூப்பர் ஹிட் என்று பணம் போட்ட ரெட்ஜெயண்ட் மூவிஸே டிக்ளர் பண்ணிடுச்சு! 

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் ‘கண்ணே கலைமானே’உதயநிதி ஸ்டாலின்,தமன்னா நடித்துள்ள இந்தப் படம் சூப்பர் ஹிட் என்று பணம் போட்ட ரெட்ஜெயண்ட் மூவிஸே டிக்ளர் பண்ணிடுச்சு! 

ஆனாலும் படம் பற்றிய விமர்சனங்கள் வேறு மாதிரியாக இருக்கிறது! அப்படி பிரபல வார இதழ் ஒன்றில் வந்த விமர்சனத்தைப் பார்த்து அநியாயத்துக்கு நொந்து போய் ஒரு ஸ்டேட்டஸை தனது முகநூலில் பதிவு செய்திருக்கிறார் சீனு. அதில், தனிப்பட்ட காரணங்களுக்காக என் படங்களை தொடர்ந்து தாக்குகிறார்கள். இனிமேல் உங்கள் சங்காத்தமே வேணாம் பேட்டி கேட்டு வீட்டுப்பக்கம் வந்துறாதீங்க என்பதைப்போல சொல்லியிருக்கிறார்.

அதே வார இதழில் ஒரே ஒரு படத்தின் மூலம் இன்றுவரை பேசப்படும் இயக்குனரான தியாகராஜன் குமாரராஜா இதுக்கு கவுண்டர் கொடுக்கிற மாதிரி ஒரு கேள்விக்கு பதில் சொல்லியிருக்கிறார்.’

ஆரண்ய காண்டம்’படம் வெளி வந்து எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தை எடுத்து முடித்திருக்கிறார்.விஜய் சேதுபதி கெட்டப்பே படத்திற்கு எதிர்பார்ப்பை எகிறவைத்திருக்கும் நிலையில் ‘முதல் படம் வரும்போது ஆன்லைன் விமர்சனங்கள் அவ்வளவா இல்லை.இப்போ இருக்கிற நிலைமையே வேற! இந்த சூழல்ல உங்க படம் வருதே என்று கேட்டதுக்கு இப்படி பதில் சொல்லியிருக்கிறார்.

‘படம் பார்க்கிறவங்க அவங்களுக்கு என்ன தோணுதோ அந்த கருத்தை சொல்றாங்க.என்னோட வேலை படம் எடுக்கிறது மட்டும்தான்.ஆன்லைன் விமர்சனம் வர்றதுக்கு முன்னாடி,படம் பார்த்திட்டு அவங்களுக்கு தெரிஞ்ச ஆட்கள்ட்ட சொல்வாங்க.இப்போ ஆன்லைன்ல பலபேருக்கிட்ட சொல்றாங்க அவ்வளவுதான்!படத்தை நல்லா இருக்குன்னு கொண்டாடினா சந்தோசப்படுறோம்.அப்போ திட்டினாலும் வாங்கிக்கணும்தானே!?’

இதை யாராவது சீனுவுக்கு எடுத்து சொல்லுங்கப்பா!