இயக்குநர் வெற்றி மாறனின் அடுத்த படம் அறிவிப்பு!

 

இயக்குநர் வெற்றி மாறனின் அடுத்த படம் அறிவிப்பு!

வெற்றிமாறன் – தனுஷ் இருவரின் வெற்றி கூட்டணியில் உருவாகிய அசுரன் திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்தது.

இயக்குநர்  வெற்றிமாறன் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

asuran

வெற்றிமாறன் – தனுஷ் இருவரின் வெற்றி கூட்டணியில் உருவாகிய அசுரன் திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. கலைப்புலி.எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் சார்பில் உருவாகியுள்ள  இப்படம் பூமணி எழுத்தில் வெளியான வெக்கை நாவலை மையமாக வைத்து  எடுக்கப்பட்டுள்ளது. இதில் மலையாள நடிகை  மஞ்சு வாரியர் , பிரகாஷ் ராஜ் , பசுபதி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த படம்  பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. 

 

We are extremely happy to announce our next project, #Productionno14 with world renowned director @VetriMaaran sir.

Produced by @elredkumar

The cast and crew details will be updated shortly. pic.twitter.com/QCTTQppu3d

— RS Infotainment (@rsinfotainment) October 16, 2019

இந்நிலையில் இயக்குநர் வெற்றிமாறன் பிரபல தயாரிப்பாளரான எல்ரெட் குமார் தனது  RS Infotainment தயாரிப்பில்  ஒரு படத்தை இயக்க உள்ளதாக  அறிவித்துள்ளார்.  மேலு இதுகுறித்த முழு விவரம் விரைவில் வெளியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக வெற்றிமாறன் பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் கவிதை ஒன்றை படமாக்கவுள்ளதாகவும் அதில் பிரபல காமெடியன் சூரி முதன்மை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.