இயக்குநர் மகேந்திரனும் குமரிமுத்துவும் ஒரே இடத்தில்…!? கல்லறையில் கண்ட வினோதம்!

 

இயக்குநர் மகேந்திரனும் குமரிமுத்துவும் ஒரே இடத்தில்…!? கல்லறையில் கண்ட வினோதம்!

நடிகர் குமரிமுத்துவின் கல்லறையில் எழுதி வைத்துள்ள வாசகம் குறித்து இயக்குநர் அனிஷ் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். 

சென்னை:  நடிகர் குமரிமுத்துவின் கல்லறையில் எழுதி வைத்துள்ள வாசகம் குறித்து இயக்குநர் அனிஷ் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். 

முள்ளும் மலரும்,உதிரிப்பூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, மெட்டி, நண்டு, ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் மகேந்திரன். இவர் கடந்த 2 ஆம் தேதி உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். இவரது மறைவிற்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்ட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்தனர். 

mahendran

இந்நிலையில் மகேந்திரனின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட இயக்குநர்  அனிஷ் கல்லறையில் அவர் கண்டு வியந்த சில அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். 

anees

அதில், ‘ இயக்குநர் மகேந்திரன் அவர்களின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள மந்தவெளி சென்மேரிஸ் கல்லறைத் தோட்டத்திற்குச் சென்றிருந்தேன், எப்போதும் இது மாதிரியான மயான பூமிக்குச் செல்லும் போது முன்பே சென்று விடுவேன், காரணம் அங்கு அடக்கம் செய்யப்பட்டவர்களின் கல்லறைகளைச் சுற்றிப் பார்க்கப் பிடிக்கும், கலை,இலக்கிய, அரசியல் ஆளுமைகளின் கல்லறைகள் மற்றும் சில பழமையான கல்லறைகளையும் அதன் வாசகங்களையும் பார்ப்பேன்,

mahendran

அப்படி நான் சென்னை மற்றும் பாண்டிச்சேரி கல்லறைத்தோட்டங்களில் நாடக மேதை சங்கரதாஸ் சுவாமிகள், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், காயிதேமில்லத்,கக்கன், வலம்புரிஜான், நடிகர் சந்திரபாபு, ‘படாபட்’ ஜெயலட்சுமி…எனத் தொடரும் அவ்வாறு நேற்றைக்கு நான் பார்த்த கல்லறைகளில் சில வருடங்களுக்கு முன் மறைந்த நகைச்சுவை நடிகர் குமரிமுத்து அவர்களின் கல்லறையும் ஒன்று இயக்குநர் மகேந்திரன் இயக்கிய படங்கள் பற்றிய ஞாபகங்களிலிருந்த எனக்கு குமரிமுத்துவின் கல்லறையைப் பார்த்ததும் வியப்பாக இருந்தது காரணம் இயக்குநர் மகேந்திரன் அவர்கள் இயக்கிய அனேக திரைப்படங்களில் குமரிமுத்துக்கு மிகச்சிறப்பான வேடங்கள் கொடுத்திருப்பார் எப்படி இருவரும் ஒரே இடத்தில் அடங்கினார்கள் என்பது ஒரு வியப்பான ஒற்றுமை தான் . 

குமரிமுத்து நாடகமேடைகள் மூலம் திரைக்கு நடிகராக வந்தவர் மாறுகண்களுடன் மிகவும் சாதாரணமான தோற்றத்துடன் இருப்பவர் போராடி திரையில் வளம் வந்த வெற்றியாளர்…ஆரம்பக்காலத்தில் எம்.ஆர்.ராதாவின் நாடகக்குழுவிலிருந்தாலும் நடிகர் சங்கத்தில் ராதாரவியுடன் முரண்பட்டு முதன் முதலில் நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தின் மீது கடுமையாக விமர்சனம் செய்தவர் அதனால் சங்கத்திலிருந்து நிரந்தர உறுப்பினர் பதவியிலிருந்து விலக்கப்பட்டவர், பின்னர் அதை எதிர்த்து அவர் நீதிமன்றம் சென்று வெற்றி பெற்று மீண்டும் சங்கத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார் . 

kumarimuthu

திமுகவின் நட்சத்திரப் பேச்சாளர், கிறிஸ்துவ ஊழியர், என பல தளங்களில் பணியாற்றினாலும் மிக இயல்பான நடிப்பாற்றல் கொண்டவர் …இவரின் சிரிப்பு பல தலைமுறைகளுக்கும் அடையாளம். குமரிமுத்துவின் கல்லறையைப்பார்த்த போது அவரின் வாரிசுகள் அவரது Icon சிரிப்பை குறிப்பிட்டு “It is the time for the God …to enjoy his laughter” ( இந்த நேரம் கூட கடவுள் இவரின் சிரிப்பை ரசித்துக் கொண்டிருப்பார்) என்று அவரது கல்லறையில் பதிவிட்டதைப் பார்த்ததும் குமரிமுத்துவின் வாரிசுகள் அவர் மீது கொண்ட அன்பு கலந்த கற்பனை திறனைக்கண்டு வியக்க வைத்தது. 

aneesh

மேலும் இக்கல்லறை தோட்டத்தில் இன்னும் பல திரைத்துறையின் ஆளுமைகளின் ஒளிந்திருக்கலாம்…முடிந்து வெளியில் வரும் போது கல்லறைதோட்ட நுழைவாயிலின் அருகில் வைக்கப்பட்ட அறிவிப்புப் பலகையைப் பார்த்ததும் இன்னும் வியப்பாக இருந்தது அதில் “ இக்கல்லறையில் திரைப்படம் எடுக்க அனுமதி இல்லை” என்று எழுதப்பட்டிருந்தது, எதார்த்த சினிமாவின் வழிகாட்டி இயக்குநர் மகேந்திரன் அவர்கள் திரைப்படம் எடுக்க அனுமதிக்காத பூமியில் துகிழப் போவதை நினைத்து நகைமுரண்னுடன் வெளியே வந்தேன்’  என்று பதிவிட்டுள்ளார்.
 

இதையும் வாசிக்க: கணவனுக்குத் தெரியாமல் காதலனுடன், உறவு வைத்து கொள்வது தப்பில்லை ! நடிகை சமந்தா வக்காலத்து!?