இயக்குநர் பாலாவுக்கு என்னாச்சு? தமிழ் சினிமாவின் பரிதாபம்

 

இயக்குநர் பாலாவுக்கு என்னாச்சு? தமிழ் சினிமாவின் பரிதாபம்

தமிழ் சினிமாவில் சில இயக்குநர்களுக்கு மட்டும் தான் ரசிகர்களிடையே பெரிய ஓபனிங் இருக்கிறது. ஷங்கர், பாலா, செல்வராகவன் என இப்படி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கிய இயக்குநர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும் போதெல்லாம் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

தமிழ் சினிமாவில் சில இயக்குநர்களுக்கு மட்டும் தான் ரசிகர்களிடையே பெரிய ஓபனிங் இருக்கிறது. ஷங்கர், பாலா, செல்வராகவன் என இப்படி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கிய இயக்குநர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும் போதெல்லாம் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

bala

யுவன், முத்துக்குமார், செல்வராகவன் கூட்டணி சிதறு தேங்காயாய் எப்பொழுது உடைந்து சிதறியதோ அப்போதே செல்வராகவனின் ஹிட் லிஸ்ட் கைநழுவி போனது. அதன் பிறகு அவர் எடுத்த இரண்டாம் உலகம் எல்லாம் ரசிகர்களிடையே அவரது பிம்பத்தை அதள பாதாளத்திற்கு கொண்டு போனது. சூர்யாவை வைத்து என்ஜிகே மூலமாக விட்ட இடத்தைப் பிடிப்பார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு, சூர்யாவின் மார்க்கெட்டையும் சேர்த்தே கீழிறக்கி புண்ணியம் தேடிக் கொண்டிருக்கிறார் செல்வா.
இந்நிலையில் இயக்குநர் பாலாவுக்கு என்ன ஆனது என்பது தான் தமிழ் சினிமாவின் மில்லியன் டாலர் கேள்வியாய் நிற்கிறது ரசிகர்களின் மனதில்.
‘சேது’ படம் மூலமாக எண்ட்ரியாகி, தமிழ் சினிமாவிற்கு பல தரமான படைப்புக்களை கொடுத்தவர் இயக்குநர் பாலா. இவர் இயக்கத்தில் வரும் படங்கள் வணிக ரீதியாக வெற்றியடைகிறதோ இல்லையோ, ரசிகர்களுக்கு விருந்தாகவும், படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு புது அனுபவமாகவும் இருக்கும். அவர்களின் திரையுலகில் அடுத்தக் கட்டத்திற்கு கொண்டுச் செல்லும் படங்களாகவே பாலாவின் படங்களைக் கருதுவார்கள். விக்ரம், சூர்யா, பூஜா, லைலா, சிம்ரன், ஆர்யா, அதர்வா, வரலட்சுமி என்று பாலா படம் மூலமாக லைம் லைட்டிற்கு வந்து கல்லா கட்டிய நட்சத்திரங்களின் லிஸ்ட் நீளமானது.  ஆனால், சமீப காலமாக பாலாவின் படங்கள், அவரது பழைய படங்களைப் போல் இல்லை என்றும் அவர் இன்னும் அப்டேட் ஆகவில்லை என்றும் சொல்கிறார்கள் ரசிகர்கள். 

bala

தன் கதையில் யாரையுமே நுழையவிடாமல், நினைத்த சினிமாவை எடுத்து பிரமிக்க வைக்கும் பாலா, ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தை ரீமேக் செய்து இயக்கப் போகிறார் என்ற அறிவிப்பு வெளியானதுமே பலரும் புருவம் உயர்த்தினார்கள். பின், விக்ரம் மகன் மீதுள்ள ப்ரியத்தாலும், விக்ரமின் நட்பிற்காகவுமே பாலா சம்மதித்தார் என்று செய்திகள் றெக்கைக் கட்டி பறந்தது. அதன்பின்னர், ‘பாலா ஒழுங்காகப் படத்தை எடுக்கவில்லை. எடுத்த வரையில் குப்பையில் போடுகிறோம்’ என்று படத்தின் தயாரிப்பாளர் அறிவித்தது எல்லாம் காலகாலத்துக்கும் பாலாவின் மீது சுத்தம் செய்யவே முடியாதபடி, படிந்த கறை.
‘புலி பதுங்குவது பாய்வதற்கு தான்… பிரமாதமான படத்தை, ஆர்யாவை வைத்து துவங்க இருக்கிறார் பாலா.. அதற்காக லொகேஷன் பார்த்து வருகிறார்’ என்றெல்லாம் செய்திகள் வெளியானது. 

bala

பாலாவை அடித்து, துவைத்து, விக்ரம் கைநழுவியப் பிறகு, ஆறுதலாக வந்து நின்ற ஆர்யா, ‘புது மாப்பிள்ளை’யானதும் வாக்குறுதியைக் காற்றில் பறக்க விட்டுட்டாராம். முரளிக்காக அதர்வாவுக்கு வாழ்க்கைக் கொடுத்த பாலா, அதர்வாவிடம் கால்ஷீட் கேட்க, அந்தப் பக்கத்திலிருந்தும் பாசிட்டிவ் ரிப்ளை வரவில்லை.  
கம்பீரமாய் வலம் வந்த பாலா, தற்போது வரையில் எந்தவொரு படத்தையும் இயக்கவில்லை என்பது தான் முகத்தில் அறைகிற நிஜம். எந்த நடிகரும் இயக்குநர் பாலா மீது நம்பிக்கை வைத்து கால்ஷீட் தர முன்வரவில்லை. புது நடிகர்களை வைத்து தயாரிக்க தயாரிப்பாளர்கள் முன்வரவில்லை. பந்தயக்குதிரை, எப்பொழுதும் ஓடிக்கிட்டிருந்தா தான் மரியாதை என்பது பாலா விஷயத்தில் நிரூபணமாகியிருக்கிறது.