இயக்குநர் – தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த விஜய் பட நாயகி!

 

இயக்குநர் – தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த விஜய் பட நாயகி!

 நடிகர் சேத்தன் சீனு நடிக்கும் இத்திரைப்படத்துக்கு ப்ரொடக்‌ஷன் நம்பர் ஒன் என தற்போது பெயரிடப்பட்டுள்ளது. 

தமிழில் காசி, கண்ணுக்குள் நிலவு, சமுத்திரம், கருப்பன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர்  நடிகை காவேரி (எ) கல்யாணி. இவர் தற்போது இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார்.

TTN

‘கே2கே ப்ரொடக்‌ஷன் என்ற  தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் த்ரில்லர் பாணியில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் திரைப்படம் ஒன்றை எடுத்து வருகிறார்.  நடிகர் சேத்தன் சீனு நடிக்கும் இத்திரைப்படத்துக்கு ப்ரொடக்‌ஷன் நம்பர் ஒன் என தற்போது பெயரிடப்பட்டுள்ளது. 

TTN

இந்நிலையில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு இப்படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  

TN

உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு தனித்துவமான காதல் கதையை, உளவியல் திரில்லர் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறோம் என படத்தின் இயக்குநர்  காவேரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.