இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கும் இந்த நடிகைக்கும் திருமணம்?

 

இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கும் இந்த நடிகைக்கும் திருமணம்?

இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கும் நடிகை சாய் பல்லவிக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சென்னை: இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கும் நடிகை சாய் பல்லவிக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கிரீடம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.எல்.விஜய். அதைத்தொடர்ந்து  தாண்டவம், தெய்வத்திருமகள், மதராசபட்டினம், வனமகன், சைவம், தேவி, தியா உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தற்போது ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை இயக்கி வருகிறார். 

amalapaul

இவருக்கும் அமலாபாலுக்கும், ‘தலைவா’ படத்தில் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறி,கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் சில கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டதாக அறிவித்தனர். 

இதைத்தொடர்ந்து படங்களில் மட்டும் தனது கவனத்தைச் செலுத்தி வந்த நிலையில் விஜய் தற்போது வளர்ந்து வரும் கதாநாயகியான சாய் பல்லவியைத் திருமணம் செய்யவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. 

sai pallavi

விஜய் இயக்கத்தில் வெளியான ‘கரு’ படத்தில் சாய் பல்லவி நடித்த போது, இவர்கள் இருவருக்கு இடையில் நல்ல புரிதல் ஏற்பட்டு, காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது. ஆனால் இது வதந்தியாக இருக்கலாம் என்பதே பலரது கருத்தாக உள்ளது. 

இதையும் படிங்க: அந்த திரைப்படத்திற்கு நான் இசையமைக்கவில்லை: யுவன் ஷங்கர் ராஜா