இயக்குநராக அவதாரம் எடுக்கும் நகைச்சுவை நடிகர் விவேக்

 

இயக்குநராக அவதாரம் எடுக்கும் நகைச்சுவை நடிகர் விவேக்

நடிகர் விவேக் விரைவில் ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாகப் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 

சென்னை: நடிகர் விவேக் விரைவில் ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாகப் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 

தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து சுமார் 100 படம் மேல் நகைச்சுவை நடிகராக  நடித்தவர் நடிகர் விவேக். இவரின் காமெடியில் பல சிந்திக்க வைக்கும் கருத்து உள்ளதால் அதற்கு என்றே ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் கடைசியாகத் தல அஜித்தின் விஸ்வாசம் படத்தில் நடித்திருந்தார். அதையடுத்து தற்போது தளபதி 63 திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

vivek

இந்நிலையில் நடிகர் விவேக் நடித்துள்ள ‘வெள்ளை பூக்கள்’ திரைப்படம் இந்த மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ளது. அதையொட்டி பேட்டி ஒன்றில் இயக்குநராக விவேக்கை எப்போது பார்ப்பது? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, ‘என்னுடைய திரைக்கதை எழுதும் திறனைப் பார்த்து எழுத்தாளர் சுஜாதா ஒருமுறை பாராட்டினார். அதேபோல் ‘அலைபாயுதே’ படப்பிடிப்பின் போது இயக்குநர் மணிரத்னம் என்னை ஒரு படம் இயக்குமாறு கூறினார்.

vivek

தற்போது நான் நடித்துக்கொண்டிருக்கும் படங்களுக்கு நடுவே ஒரு திரைக்கதை எழுதிக் கொண்டிருக்கிறேன். அது முடிந்தவுடன் கண்டிப்பாக இயக்குநர் விவேக் பற்றிய அறிவிப்பு வெளியாகும்’ என்று அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: பாடகராக அறிமுகமானார் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தொகுப்பாளர்! அதுவும் இந்த படத்தில்!