இயக்கப்படாத அரசு பேருந்து.. மாலை வேளையில் டாஸ்மாக் வழியாக நடந்து செல்லும் மாணவிகள் : பீதியில் பெற்றோர் !

 

இயக்கப்படாத அரசு பேருந்து.. மாலை வேளையில் டாஸ்மாக் வழியாக நடந்து செல்லும் மாணவிகள் : பீதியில் பெற்றோர் !

பல கிராமங்களில் மணிக்கு ஒரு  பேருந்தும், சில இடங்களில் நடைப்பயணமாக மாணவர்கள் பள்ளிக்கு செல்வதும் இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

பல கிராமங்களில் மணிக்கு ஒரு  பேருந்தும், சில இடங்களில் நடைப்பயணமாக மாணவர்கள் பள்ளிக்கு செல்வதும் இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதே போலக் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அடுத்துள்ள இம்மிடி பாளையம் மற்றும் தேவரடிபாளையம் கிராமங்களைச் சேர்ந்த மாணவிகள் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் சேர்ந்து பயின்று வருகின்றனர். இந்த கிராமத்திற்கும் கிணத்துக்கடவில் இருக்கும் பள்ளிக்கும் மொத்தமாக 5 கி.மீ தூரம். மாணவிகள் அனைவரும் பொள்ளாச்சியில் இருந்து செல்லும் 42 என்ற பேருந்தில் தான் பள்ளிக்குச் செல்வார்களாம். ஆனால், கடந்த ஒரு மாத காலமாகப் பேருந்து இயக்கப்படாததால் மாணவிகள் நடந்தே பள்ளிக்குச் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ttn

இதுமட்டுமில்லாது மாணவிகள் செல்லும் வழியில் டாஸ்மாக் ஒரு உள்ளது. மாலை பள்ளி முடிந்ததும் வீடு திரும்புவதற்கு இரவு நேரம் ஆகி விடுவதால் அந்த டாஸ்மாக் வழியே வீட்டிற்குச் செல்வதற்கு மாணவிகள் பெரிதும் பயப்படுகின்றனர். இது மாணவிகளின் பெற்றோர்களிடையேயும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்துப் பேசிய பேருந்து மண்டல மேலாளர், பாதை சரியில்லாததன் காரணமாகப் பேருந்து அங்கு இயக்கப்படாமல் இருப்பதாகவும், இப்போது வழக்கம் போலச் செயல்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் மாணவிகளோ, காலை ஒரு சில பேருந்துகள் வருகின்றன. ஆனால், மாலை வேளையில் அதுகூட வருவதில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளனர். மேலும், மற்ற வேளைகளில் இயக்கப் படவில்லை என்றாலும் காலை, மாலை வேலைகளில் மட்டும் பேருந்தை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.