இம்ரான் கான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை திருப்பி கொடுத்தா தான் பேச்சுவார்த்தை- மத்திய அமைச்சர் தகவல்

 

இம்ரான் கான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை திருப்பி கொடுத்தா தான் பேச்சுவார்த்தை- மத்திய அமைச்சர் தகவல்

இந்தியாவிடம் பேச்சு வார்த்தை நடத்த விரும்பினால், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே தெரிவித்தார்.

இந்தியா இனி பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்துதான் இருக்கும் என சில மத்திய அமைச்சர்கள் சொல்லி வருகின்றனர். ஆனால் அவர்களே எல்லாம் தூக்கி சாப்பிட்டு விட்டார் நம்ம மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே. ஆக்ரமிப்பு காஷ்மீரை இந்தியாவிடம் திருப்பி கொடுத்தால்தான் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை என்று அதிரடியாக கூறினார்.

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் வரைப்படம்

இந்திய குடியரசு கட்சி தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அதவாலே நேற்று செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நம்மிடம் பேசவிரும்பினால், முதலில் அவர்கள் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருக்கும் காஷ்மீரின் ஒரு பகுதியை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். காஷ்மீர் மீது அவர்களுக்கு எந்தவித உரிமையும் கிடையாது. அவர்கள் அந்த பகுதியை சட்டத்துக்கு புறம்பாக பிடித்து வைத்துள்ளனர்.

இம்ரான் கான்

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்கள் இந்தியாவுடன் இணையவே விரும்புகின்றனர். மேலும் இம்ரான் அளித்த தவறான வாக்குறுதிகள் மற்றும் அவர் ஒன்றுமே செய்யவில்லை என்பதையும் அவர்கள் நன்றாக தெரிந்து வைத்துள்ளனர். 
சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கம் என்ற புரட்சிகரமான நடவடிக்கையால் ஜம்மு அண்டு காஷ்மீர் மீண்டும் ஒருமுறை இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. வரும் 5  ஆண்டுகள் அங்கு பெரிய அளவில் முன்னேற்றங்கள் ஏற்படும் என நினைக்கிறேன்.