இமாச்சல் பனிப்பொழிவில் சிக்கிய 12 பேர் : மீட்புப் பணி தீவிரம் !

இமாச்சல் பனிப்பொழிவில் சிக்கிய 12 பேர் : மீட்புப் பணி தீவிரம் !

குளிர்காலம் தொடங்கியதால் வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

குளிர்காலம் தொடங்கியதால் வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

hjimahcal

அம்மாநிலத்தில் உள்ள  கிண்ணார் மாவட்டத்தின் ரோக்கோங் பியோ என்னும் பகுதிகளில் உள்ள வீட்டின் கூரைகள் பனிப்பொழிவில் முழுவதுமாக மூடிக் காணப்படுகின்றன. மக்கள் வீட்டிலிருந்தே வெளியே வர முடியாததால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போன்று, சில்லா மாவட்டத்திலும் கடும் பனிப்பொழிவின் காரணமாகச் சாலைகளில் 2 மீட்டர் அளவிற்குப் பனி மூடியுள்ளது. இதனால் போக்குவரத்து சேவை முற்றிலுமாக முடங்கியுள்ளது. மேலும், அப்பகுதிகளில் விமானச் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. 

himahcal

இந்நிலையில், லாஹவுல்-ஸ்பிடி மாவட்டத்துக்குத் தோட்டக் கலைத்துறையினர் 10 பேர் மற்றும் 2 உதவியாளர்கள் ஆய்வு மேற்கொள்ளச் சென்றுள்ளனர். ஆய்வு முடித்த பின்னர் திரும்ப முயற்சி செய்த அவர்கள் சுரங்கப்பாதை உள்ளிட்டவை பனிப்பொழிவால் மூடிக் கிடப்பதால் தங்களால் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டிருப்பதாக  தொலைப்பேசி மூலம் காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளனர். அவர்களை மீட்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.