“இப்படி பண்ணா கொரானாவுக்குத்தான் கொண்டாட்டம் “-ஆந்திர -தெலுங்கானா எல்லையை திறக்க போலீஸ் மீது கல்வீச்சு …

 

“இப்படி பண்ணா கொரானாவுக்குத்தான் கொண்டாட்டம் “-ஆந்திர -தெலுங்கானா எல்லையை திறக்க போலீஸ் மீது கல்வீச்சு …

கொரானா வைரஸ் பரவாமல் தடுக்க நடைபெறும் ஊரடங்கால் பொதுமக்களும் ,மாணவர்களும் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். ஆனால் அந்தந்த மாநில எல்லையில் தடுக்கப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர் .தெலுங்கானா அதிகாரிகள் ஏராளமான மாணவர்களுக்கு ஆந்திராவில் தங்கள் சொந்த இடங்களுக்குச் செல்ல அனுமதி வழங்கியுள்ளனர்.

கொரானா வைரஸ் பரவாமல் தடுக்க நடைபெறும் ஊரடங்கால் பொதுமக்களும் ,மாணவர்களும் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். ஆனால் அந்தந்த மாநில எல்லையில் தடுக்கப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர் .தெலுங்கானா அதிகாரிகள் ஏராளமான மாணவர்களுக்கு ஆந்திராவில் தங்கள் சொந்த இடங்களுக்குச் செல்ல அனுமதி வழங்கியுள்ளனர். ஆனால் ஆந்திர எல்லையில் உள்ள காவல்துறையினர் ஊரடங்கு உத்தரவின்படி, அவர்களை மாநிலத்திற்குள் நுழைய அனுமதிக்கவில்லை.

border-chaos

ஆந்திராவிற்குள் நுழைய விடாமல்  பல மணி நேரம் காவல்துறையினர் சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தியபோது, ​​அவர்கள் கற்களை வீசி  சில போலீஸ்காரர்களைக் காயப்படுத்தினர்.
அதனால்  புதன்கிழமை  ​​இரு மாநிலங்களின் முதல்வர்களும் கலந்துரையாடி, அவர்களை  ஒரே ஒரு முறை கடந்து செல்ல அனுமதித்தனர்.

ஊரடங்கு  காலம் இன்னும் பல நாட்கள் இருப்பதால் , மாணவர்களும் ஊழியர்களும் வரவிருக்கும் காலங்களில்  எல்லையைத் தாண்ட விரும்பினால், எல்லையில் உள்ள காவல்துறையினர் அவர்களை மீண்டும் அனுமதிக்க மாட்டார்கள். அனைவரும் வைரஸ் பரவலை தடுக்க  அவர்கள் இருக்கும் இடத்திலேயே இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .அரசின்  கோரிக்கைப்படி  பொதுமக்கள் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயிருந்தால் ​​நாம் எதிர்பார்த்ததை விட வேகமாக பரவும் கொடிய கொரானா  வைரஸை தடுக்க வாய்ப்பு உள்ளது.