‘இப்படி பண்ணா இனி டாக்டருங்க பொம்பளைங்களுக்கு வைத்தியம் பண்ணவே பயப்படுவாங்க’ …- மிரட்டிய பெண்ணால் மிரண்ட டாக்டர் ..

 

‘இப்படி பண்ணா இனி டாக்டருங்க பொம்பளைங்களுக்கு வைத்தியம் பண்ணவே பயப்படுவாங்க’ …- மிரட்டிய பெண்ணால் மிரண்ட டாக்டர் ..

டாக்டரின் கூற்றுப்படி , கடந்த ஆண்டு அக்டோபரில், ஒரு பெண், மருத்துவருக்கு எதிராக அவர் தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக   ஒரு தவறான புகாரை பதிவு செய்திருந்தார், மருத்துவமனையில் கட்டணம் செலுத்துதல் தொடர்பாக இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறுக்கு பிறகு அவர் தன்னைத் துன்புறுத்தியதாக அந்த பெண் புகார் கூறினார் 

புனே நகரத்தைச் சேர்ந்த மருத்துவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தததாக மிரட்டி  . 75 லட்சம் ரூபாய் பணத்தை ஒரு கூட்டம் பறித்துள்ளது.
டாக்டரின் கூற்றுப்படி , கடந்த ஆண்டு அக்டோபரில், ஒரு பெண், மருத்துவருக்கு எதிராக அவர் தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக   ஒரு தவறான புகாரை பதிவு செய்திருந்தார், மருத்துவமனையில் கட்டணம் செலுத்துதல் தொடர்பாக இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறுக்கு பிறகு அவர் தன்னைத் துன்புறுத்தியதாக அந்த பெண் புகார் கூறினார்.

doctor

இந்த பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான போலீஸ்  விசாரணையின் போது, ​​அந்தப்பெண்  மேலும் சில நபர்களுடன்  காவல் நிலையத்திற்கு வந்து , அவர் தான் ஒரு சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும்  எனவே, அந்த டாக்டர்  பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில்  கைது செய்யப்படுவார்,என  மருத்துவரின் தாயாரான பெண் டாக்டரை  மிரட்டியுள்ளார் ,  மேலும்  அவர் எஸ்சி / எஸ்டி  சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுவார், என்றும் மிரட்டியுள்ளார் 
மேலும், குற்றம் சாட்டப்பட்டவர் உங்கள்  மகனுக்கு ஜாமீன் கிடைக்காது  என்றும் 10 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படலாம் என்றும் கூறி மருத்துவரை மிரட்டினார். அதனால் இந்த வழக்கை சுமுகமாக தீர்ப்பதற்காக, அவர் ரூ .1.3 கோடி பணம் கேட்டுள்ளார் . இதனால் பயந்த மருத்துவர் அவருக்கு ரூ .21 லட்சம் ரொக்கத்தையும், காசோலை மூலம் ரூ .54 லட்சம் செலுத்தியுள்ளார் . பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர், மேலும் டாக்டரை மிரட்டி இன்னும்  ரூ .55 லட்சம் பணத்தை கேட்டார் .

இதனால் பாதிக்கப்பட்ட மருத்துவர் பிப்ரவரி 9 ம் தேதி உள்ளூர் போலீசில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ததை அடுத்து  போலீஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 420, 388, 34 மற்றும் 384 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது