“இப்படி ஒரு திறமையா?” பும்ராவை புகழ்ந்து தள்ளிய வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்!!

 

“இப்படி ஒரு திறமையா?” பும்ராவை புகழ்ந்து தள்ளிய வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்!!

பும்ராவின் பந்துவீச்சை கண்டு மிகவும் வியப்படைந்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரும் ஜாம்பவானுமான ஆன்டி ராபர்ட்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

தற்போது வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் போட்டிக்கான தொடரில் 2-0 என வென்றது. அதேபோல் டி20 தொடரில் 3-0 என வென்றது. தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.

 முதல் டெஸ்ட் போட்டி ஆண்டிகுவா மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி முதல் இன்னிங்சில் இந்தியா 297 ரன்கள் அடித்தது. அதன்பிறகு  வெஸ்ட் இண்டீஸ் அணி 222 ரன்கள் அடித்தது. இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 343 எடுத்து டிக்ளேர் செய்தது.

bumrah

419 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி, பும்ராவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 318 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியை சந்தித்தது. இப்போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் பும்ரா அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர் 8 ஓவர்கள் வீசி 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

பும்ராவின் இந்த அபார பந்துவீச்சை கண்டு வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் ஆன்டி ராபர்ட்ஸ் புகழ்ந்து தள்ளியுள்ளார். அவர் கூறுகையில், பும்ராவின் பந்துவீச்சு ஆக்சன் மிகவும் சிறப்பாக உள்ளது. துல்லியமாக பந்துவீச இந்த முறை சரியாக இருக்கும். நான் ஆடும் காலத்தில் இப்படி ஒருவர் இருந்திருந்தால் நிச்சயம் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இவரைப் போன்று ஒருவரை உருவாக்கியிருப்போம். இவரின் பந்துவீச்சை கண்டு மிகவும் வியப்படைந்தேன். இந்திய அணிக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இவர் இருப்பார் என புகழாரம் சூட்டியுள்ளார்.