இப்தார் விருந்தில் இந்திய தொண்டு நிறுவனம் புதிய கின்னஸ் சாதனை

இப்தார் விருந்தில் இந்திய தொண்டு நிறுவனம் புதிய கின்னஸ் சாதனை

துபாயில் இந்தியர் ஒருவரால் நடத்தப்பட்டு வரும் தொண்டு நிறுவனத்தின் மூலம் அந்நாட்டு மக்களுக்கு சுமார் ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கு அமர்த்தப்பட்டு இப்தார் விருந்து அளிக்கப்பட்டது. இது உலகின் மிக நீளமான பசியாறும் விருந்து என கின்னஸ் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டு புதிய கின்னஸ் சாதனையாக அமைந்துள்ளது.

உலகம் முழுவதும் அனைத்து இஸ்லாமியர்களாலும் தற்போது ரம்ஜான் நோன்பு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

dinner

இந்த நோன்பானது அதிகாலை 3 முதல் 4 மணிக்குள்ளாகவே உணவருந்தப்பட்ட பிறகு, நாள் முழுவதும் எந்தவித ஆகாரமும் இல்லாமல் சூரியன் அஸ்தமித்த பிறகு மாலை மீண்டும் உணவருந்திவிட்டு உறங்கச் செல்லும் விதமாக ரம்ஜான் எனும் பெரும் பண்டிகைக்கு முன்னர் இருக்கும் ஒரு மாத காலம் இஸ்லாமியர்களால் கடைபிடிக்கப்படும் ஒன்று. 

இவ்வாறு நாள் முழுவதும் எந்த வித உணவு அருந்தாமல் சூரியன் அஸ்தமித்த பிறகு மாலை உண்ணப்படும் உணவை இப்தார் விருந்து என்று அழைப்பார். 

ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோகிந்தர் சிங் சலாரியா என்பவர் பெஹல் இன்டர்நேஷனல் எனும் நிறுவனத்தை நிறுவி அதை தொடர்ந்து நடத்தி வருகிறார். 

eating

அதேபோல் இவர் பி சி டி மனிதநேய அறக்கட்டளை எனும் தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். பலதரப்பட்ட நாட்டு மக்களுக்கும் தன்னால் முடிந்த உதவிகளை இதன் வாயிலாக ஜோகிந்தர் சிங் செய்து வருகிறார். இஸ்ரேல் நாட்டில் நடந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இவரது தொண்டு நிறுவனம் உதவி செய்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்களுக்கு இப்தார் விருந்தினை இந்நிறுவனம் அளித்து வருகிறது. இந்த ஆண்டு புதுமையாக செய்யும் முயற்சியில் இறங்கி துபாயில் உள்ள அபுதாபி நகர சாலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அனைவரையும் அமர வைத்து 5க்கும் மேற்பட்ட சைவ உணவு வகைகளை நோன்பு இருக்கும் இஸ்லாமியர்களுக்கு பரிமாறி இப்தார் விருந்து அளித்தது. இதன் மூலம் உலகில் மிக நீளமான பசியாறும் விருந்து என்ற கின்னஸ் சாதனையை இந் நிறுவனம் படைத்துள்ளது.