இன்-டிஸ்பிளே விரல்ரேகை சென்சார் கொண்ட ஓப்போ கே1 ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு

 

இன்-டிஸ்பிளே விரல்ரேகை சென்சார் கொண்ட ஓப்போ கே1 ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு

இன்-டிஸ்பிளே விரல்ரேகை சென்சார் கொண்ட ஓப்போ கே1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் எப்போது விற்பனைக்கு வெளியாகிறது என்பது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி: இன்-டிஸ்பிளே விரல்ரேகை சென்சார் கொண்ட ஓப்போ கே1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் எப்போது விற்பனைக்கு வெளியாகிறது என்பது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இன்-டிஸ்பிளே விரல்ரேகை சென்சார் கொண்ட ஓப்போ கே1 ஸ்மார்ட்போன் எப்போது விற்பனைக்கு வெளியாகிறது என்பது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் கடந்த அக்டோபர் மாதம் வெளியானது குறிப்பிடத்தக்கது. இதில் 6ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 660 உட்பட பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

அத்துடன் 25 எம்.பி செல்ஃபி கேமராவுடன் வருவதால் ரூ.20,000 பட்ஜெட் போன்களுக்கு போட்டியாக வெளியாகவுள்ளது. இந்நிலையில், நம்பமுடியாத விலையில் இந்த போன் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் இதன் 4 ஜிபி ரேம் வெர்ஷன் ரூ.16,900 விலையிலும், 6 ஜிபி ரேம் வெர்ஷன் ரூ.19,000 விலையிலும் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோச்சா ரெட் மற்றும் வேன் கோ ப்ளூ ஆகிய நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டுள்ளது. ஃபிளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனைக்கு வெளியாகிறது.