இன்-டிஸ்பிளே விரல்ரேகை சென்சார் கொண்ட ஓப்போ கே1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

 

இன்-டிஸ்பிளே விரல்ரேகை சென்சார் கொண்ட ஓப்போ கே1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

இன்-டிஸ்பிளே விரல்ரேகை சென்சார் கொண்ட ஓப்போ கே1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி: இன்-டிஸ்பிளே விரல்ரேகை சென்சார் கொண்ட ஓப்போ கே1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓப்போ கே1 ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று மதியம் 12 மணிக்கு இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் பிப்.12-ஆம் தேதி விற்பனைக்கு வெளியாகவுள்ளது. மோக்கா ரெட் மற்றும் கோ புளு ஆகிய இருவிதமான நிறங்களில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஓப்போ கே1 ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்களாக 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 16 எம்.பி + 2 எம்.பி இரட்டை பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 25 எம்.பி செல்ஃபி கேமரா, இன்-டிஸ்பிளே விரல்ரேகை சென்சார், டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத், 3600 எம்.ஏ.ஹெச் பேட்டரி ஆகியவை இடம்பெற்றுள்ளன.