இன்ஸ்டெண்ட் மாங்காய் ஊறுகாய்!

 

இன்ஸ்டெண்ட் மாங்காய் ஊறுகாய்!

இது மாங்காய் சீசன்,கிலோ இருபது ரூபாய்க்கே தரமான சதைப்பிடிப்பான மாங்காய் ஒன்றை வாங்கி வந்தால், ஒரு வாரத்துக்கு போதுமான ஊறுகாய் பத்து நிமிடத்தில் ரெடி.

இது மாங்காய் சீசன்,கிலோ இருபது ரூபாய்க்கே தரமான சதைப்பிடிப்பான மாங்காய் ஒன்றை வாங்கி வந்தால், ஒரு வாரத்துக்கு போதுமான ஊறுகாய் பத்து நிமிடத்தில் ரெடி.

எப்படிச் செய்வது.

mango

மாங்காய்- பெரியது 1
மாங்காயை உங்களால் முடிந்தவரை பொடியாக வெட்டிக்கொள்ளுங்கள்.

mango

அரைத்து பொடிக்க

காய்ந்த மிளகாய் 4
பெருங்காயம் சிறு துண்டு
வெந்தயம் ஒரு ஸ்பூன்

mango

காய்ந்த மிளகாய்,வெந்தயம் இரண்டையும் எண்ணெய இல்லாமல் வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.பெருங்காயத்தை சிறிதளவு எண்ணையில் பொரித்து எடுங்கள்.சூடு ஆறியதும்,மிளகாய் வெந்தயம்,பெருங்காயம் மூன்றையும் சேர்த்து பொடித்தெடுங்கள்.

mango

இப்போது,ஒரு கடாயை அடுப்பில் வைத்து,அது சூடானதும் ஒரு குழிக்கரண்டி நல்லெண்ணெய் விடுங்கள்.எண்ணெய் சூடானதும் அரை ஸ்பூன் கடுகு போட்டுப் பொரிய விடுங்கள்.அதில் கொஞ்சம் மஞ்சள் தூளும்,இரண்டு ஸ்பூன் மிளகாய் பொடியும் போட்டு ஒரு நிமிடம் கிளறிவிட்டு,அதில் வெட்டி வைத்திருக்கும் மாங்காய் துண்டுகளைக் கொட்டி கிளறி அதில் இரண்டு ஸ்பூன் உப்பும்,வறுத்துப் பொடித்த மிளகாய் ,வெந்தயம்,பெருங்காய பொடியைக் கொட்டி நன்றாக கிளறிவிட்டு அடுப்பை அணைக்கவும் அவ்வளவுதான், இன்ஸ்டெண்ட் மாங்காய் ஊறுகாய் ரெடி!