“இன்ஸ்டாகிராமில் நிர்வாண வீடியோ”.. பெண்ணிடம் சாட் செய்வதாக எண்ணி ரூ.59,000 பணத்தை இழந்த இளைஞர்!

 

“இன்ஸ்டாகிராமில் நிர்வாண வீடியோ”.. பெண்ணிடம் சாட் செய்வதாக எண்ணி ரூ.59,000 பணத்தை இழந்த இளைஞர்!

இவர் அதிகமாக இன்ஸ்டாகிராமை உபயோகப்படுத்தி வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ஒரு ரியா என்னும் பெயர் கொண்ட ஐடியின் ஸ்டேட்டஸ் ஒன்றைப் பார்த்துள்ளார்.

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஐசக்(20). இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அதிகமாக இன்ஸ்டாகிராமை உபயோகப்படுத்தி வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ஒரு ரியா என்னும் பெயர் கொண்ட ஐடியின் ஸ்டேட்டஸ் ஒன்றைப் பார்த்துள்ளார். அதில், குறைந்த பணத்தில் நிர்வாண வீடியோ கால் பேசலாம் என்று போடப்பட்டிருந்துள்ளது. 

ttn

உடனே அந்த முகவரிக்கு தொடர்பு கொண்ட ஐசக், பெண் என்று நினைத்து அந்த நபரிடம் பேசிக் கொண்டிருந்துள்ளார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசியவுடன் அந்த நபர் ஐசக்கின் நிர்வாண வீடியோவை அனுப்பும் படி கேட்டுள்ளார். அப்போதும், தான் ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருப்பதாக எண்ணி தனது நிர்வாண வீடியோவை ஐசக் அனுப்பியுள்ளார். இதனையடுத்து, ஒரு எண்ணிலிருந்து ஐசக் செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர், உன் நிர்வாண வீடியோவை உனது உறவினர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அனுப்பி விடுவேன் என்றும் அதனை அனுப்பாமல் இருக்க ரூ.60 ஆயிரம் பணம் கொடுக்க வேண்டும் என்றும் மிரட்டியுள்ளார். 

ttn

இதனால் பயந்து போன ஐசக், போன் பே (PhonePe) மூலம் ரூ.59,000 பணத்தை 3 தவணையாக அனுப்பி விட்டு,  அயனாவரம் போலீசில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது சைபர் கிரைம் என்பதால் இந்த புகாரை சைபர் கிரைம் போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஐசக் இவ்வாறு செய்து பணத்தை இழந்தது அவரது பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.