இன்ஸ்டாகிராமில் காசுக்கொடுத்து லைக்ஸ்களை வாங்கும் கும்பல்! இன்ஸ்டாகிராம் எடுத்த நூதன முடிவு

 

இன்ஸ்டாகிராமில் காசுக்கொடுத்து லைக்ஸ்களை வாங்கும் கும்பல்! இன்ஸ்டாகிராம் எடுத்த நூதன முடிவு

இன்ஸ்டாகிராமில் அங்கீகாரம் பெற்ற சில பயனாளர்கள் பணம் கொடுத்து லைக்குகளை பெறுவதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.

இன்ஸ்டாகிராமில் அங்கீகாரம் பெற்ற சில பயனாளர்கள் பணம் கொடுத்து லைக்குகளை பெறுவதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.

சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்படும் புகைப்படங்களுக்கும், வீடியோக்களுக்கும் கமெண்ட்ஸ்களில் கிடைக்கும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் சரிவர கவனிக்காமல் எந்த அளவுக்கு பகிரப்பட்டுள்ளது என்றும் அது எத்தனை பேருக்கு எந்தெந்த வகையில் பிடித்து லைக் செய்திருக்கிறார்கள் என்ற மனநிலையிலேயே முக்கால்வாசி பயனாளர்கள் இருக்கின்றனர்.

இது சிலருக்கு போட்டி மனப்பான்மையையும், பொறாமையையும், மன அழுத்தத்தையும் தருவதாக தொழில்நுட்ப ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், அங்கீகாரம் பெற்ற சில பயனாளர்கள் பணம் கொடுத்து லைக்குகளை பெறுகின்றனர். இதனால் அவர்கள் மன உளைச்சலுக்கும், மன சோர்வுக்கும் ஆளாவதாக கண்டறியப்பட்டுள்ளது.எனவே, இதுபோன்ற மன சோர்வுகளை குறைக்கும் வகையில் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் இனி போட்டோக்களுக்கு அளிக்கப்படும் லைக்ஸ் மற்றும் வீடியோக்களின் பார்வை எண்ணிக்கையை பார்க்கமுடியாத வகையில் மறைக்கும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. 

அதில், போட்டோக்களை பதிவிடுபவர்களை தவிர மற்ற எவருக்கும் அந்த பதிவுக்கு எவ்வளவு லைக்ஸ் வந்துள்ளது என்றும், எத்தனை பேர் அந்த வீடியோவை பார்த்துள்ளனர் என்ற விவரமும் காட்டப்படமாட்டாது என இன்ஸ்டாகிராம் நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா, இத்தாலி, அயர்லந்து, ஜப்பான், பிரேசில், நியூசிலந்து ஆகிய நாடுகளில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.