இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

 

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி  விலை நிலவரம்!

இந்த ஆண்டு தொடக்கத்தில் தங்க விலை உச்சத்தை அடைந்ததைத் தொடர்ந்து மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்தது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் தங்க விலை உச்சத்தை அடைந்ததைத் தொடர்ந்து மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்தது. அதன் பின்னர், கடந்த சில நாட்களாகத் தங்க விலை அதிரடியாக உயர்ந்து ரூ.33 ஆயிரத்தை எட்ட வரலாறு காணாத விலை உயர்வை அடைந்தது. இதனையடுத்து கடந்த சில நாட்களாகத் தங்க விலை குறைந்து வந்த நிலையில் நேற்று உயர்ந்தது. இந்நிலையில், இன்று தங்க விலை மீண்டும் குறைந்துள்ளது. 

ttn

இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ. 34 குறைந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.3,834க்கு விற்கப்படுகிறது. அதன் படி, தங்க விலை சவரனுக்கு ரூ.272 குறைந்து  ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.30,672க்கு விற்கப்படுகிறது.

மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் 70 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.37.80 க்கு விற்கப்படுகிறது. அதன் படி, வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.1,700 குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.37,800க்கு விற்கப்படுகிறது.