இன்று 85வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது டொனால்டு டக்!

 

இன்று 85வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது டொனால்டு டக்!

ஊமைப் படங்களைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த ரசிகர்களை கார்ட்டூன் படங்களை நோக்கி ஈர்த்தவர் வால்ட் டிஸ்னி. உலகின் அதிகமான கார்ட்டூன் படங்களைத் தயாரித்த நிறுவனமும் வால்ட் டிஸ்னி தான். 

ஊமைப் படங்களைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த ரசிகர்களை கார்ட்டூன் படங்களை நோக்கி ஈர்த்தவர் வால்ட் டிஸ்னி. உலகின் அதிகமான கார்ட்டூன் படங்களைத் தயாரித்த நிறுவனமும் வால்ட் டிஸ்னி தான். 

ஆனால், நாம் எல்லோரும் நம்பிக் கொண்டிருப்பதைப் போல அவருக்கு அதிக பணத்தையும்,புகழையும் தேடிக் கொடுத்தது மிக்கி மெளஸ் கிடையாது. டொனால்டு டக் தான். 1934-ம் வருடம் ஜூன் 9-ம் தேதி, ‘தி வைஸ் லிட்டில் ஹென்’ என்கிற கார்ட்டூன் வீடியோவில் தான் டொனால்டு டக் கதாபாத்திரம் முதன் முதலாகத் திரையில் வெளியானது. உலகின் அதிகம் பேர் ரசித்த கார்ட்டூன் கதாபாத்திரமும் டொனால்டு டக் தான். 

donald duck

டொனால்டு டக் கதாபாத்திரத்தை உருவாக்கிய வால்ட் டிஸ்னி, உலகப் புகழ் பெற்ற ஓவியர்.வால்ட் டிஸ்னியை வெறும் ஓவியராகவும், கார்டூன் படங்களின் தயாரிப்பாளராகவும் ஒதுக்கி விட முடியாது.இதுவரையில் டிஸ்னி, 59 முறை ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டு,அதில் 26 முறை ஆஸ்கார் விருதுகளையும் வென்றிருக்கிறார். 

நம்ம ஏ.ஆர். ரஹ்மான் ஒரே முறை இரண்டு ஆஸ்கார் வென்றதைப் போல, டிஸ்னி ஒரே வருஷத்தில் நான்கு ஆஸ்கார் விருதுகளை வென்றிருக்கிறார். இன்று வரையில் அது உலக சாதனையாகப் பார்க்கப்படுகிறது. ஆஸ்கார் விருதுகளுடன் ஏழு முறை எம்மி விருதுகளையும் பெற்றிருக்கார். 

donald duck

டொனால்டு டக் உருவான கதை ரொம்ப சுவாரஸ்யமானது. ஒரு நாள் டிஸ்னி, மிமிக்ரியில் புகழ் பெற்ற அவருடைய நண்பருடன் பேசிக் கொண்டிருந்த பொழுது, விளையாட்டாக டிஸ்னியின் நண்பர், ‘மேரி ஹெட் ஏ லிட்டில் லாம்ப்’ என்று செம்மறியாட்டின் குரலில் பாடத் துவங்கினார். இதை ரசித்த டிஸ்னியிடம், ‘இது எந்த மிருகத்தின் குரல்’ என்று நண்பர் கேட்டதும், ‘வாத்தினுடைய குரல்’ என்றார் டிஸ்னி.

‘இல்லை… ஆட்டின் குரலில் தான் பாடினேன்’என்றார் நண்பர். அதன் பிறகு டிஸ்னியின் மனம் அந்த குரலிலேயே லயித்திருந்தது. நண்பரை வற்புறுத்தி மீண்டும் அதே பாடலை வாத்தின் குரலில் பாடச் சொன்னார்… அப்போது உதயமானது தான் டொனால்டு டக் கதாபாத்திரம். உலகம் முழுக்க சிறுவர்களை மட்டுமில்லாமல் எல்லோரையும் ஈர்த்த டொனால்டு டக், இன்று கோலாகலமாக 85-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது.