இன்று 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்…வானிலை ஆய்வு மையம் தகவல்!

 

இன்று 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்…வானிலை ஆய்வு மையம் தகவல்!

திருச்செந்தூர், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் போன்ற பெரும்பாலான பகுதிகளால் கனமழை பெய்தது.

தமிழகம் மற்றும் புதுவையில்  வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக பரவலாக மேகி பெய்து வருகிறது சென்னையை பொறுத்தவரையில் நேற்று காலை முதலே விட்டு விட்டு  மழை பெய்து வந்த நிலையில், நேற்றிரவு கனமழை பெய்தது. காஞ்சிபுரம், நாகை, சீர்காழி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் போன்ற பெரும்பாலான பகுதிகளால் கனமழை பெய்தது. 

rain

இந்நிலையில்  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகம், புதுவையில் லேசா மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரைக் கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை போன்ற மாவட்டங்களில் கனமழையும், சென்னையில் லேசான மழையும் பெய்ய கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ttn

குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில்  மணிக்கு 60 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.