இன்று வெளியாகிறது காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் !

 

இன்று வெளியாகிறது காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் !

லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் இன்று காலை வெளியாகிறது.

லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் இன்று காலை வெளியாகிறது. காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ் அழகிரி இந்த பட்டியலை வெளியிட இருக்கிறார்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடக்க இருக்கிறது. இந்த தேர்தலுக்காக திமுக – காங்கிரஸ் இணைந்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என்னும் பெயரில் பெரிய கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சி மொத்தம் 10 இடங்களில் போட்டியிட இருக்கிறது. விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா இரண்டு இடங்களில் போட்டியிடும். மதிமுக, ஐயூஎம்எல், ஐஜேகே, கொங்கு நாடு மக்கள் கட்சி தலா ஒரு இடங்களில் போட்டியிடும். மீதமுள்ள 20 இடங்களில் திமுக போட்டியிடும்.

காங்கிரஸ்

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்:

திருவள்ளூர் (தனி), கிருஷ்ணகிரி, ஆரணி,கரூர், சிவகங்கை, திருச்சி, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, புதுச்சேரி.

வேட்பாளர் பட்டியல் 

இந்நிலையில், காங்கிரஸ் களமிறங்கும் தொகுதிகளுக்கான  வேட்பாளர் தேர்வு கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. இதற்கான பட்டியல் செய்யப்பட்டு டெல்லி தலைமையிடம் கடந்த வாரம் அளிக்கப்பட்டது. தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த பட்டியலை ஏற்றுக் கொண்டுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ்

இதையடுத்து இன்று காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகிறது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி இன்று காலை பட்டியலை வெளியிட இருக்கிறார். முக்கிய வேட்பாளர்களுக்கு இந்த தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.