இன்று வெளியாகவிருந்த விமலின் ‘கன்னிராசி’ படத்துக்கு என்ன ஆச்சி?

 

இன்று வெளியாகவிருந்த விமலின் ‘கன்னிராசி’ படத்துக்கு என்ன ஆச்சி?

பசங்க படம் மூலம் அறிமுகமான விமல் களவாணி படம் மூலம் புகழ்பெற்றார், இவரது நடிப்பில் உருவாகியுள்ள கன்னிராசி படம் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தள்ளிபோடப்பட்டது. 

Kanni Rasi

கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். காமெடி கலந்த குடும்ப படமாக உருவாகியுள்ள இப்படம் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  எஸ்.முத்துக்குமரன் இயக்கியுள்ள இப்படம் தவிர்க்க முடியாத காரணங்களால் இன்று வெளியாகவில்லை என்றும், இம்மாத இறுதியில் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.