இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி : ராஞ்சியில் தொடரை கைப்பற்றுமா இந்தியா

 

இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி : ராஞ்சியில் தொடரை கைப்பற்றுமா இந்தியா

இந்திய ஆஸ்திரேலிய அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி ,இன்று ராஞ்சி நகரில் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது

ராஞ்சி: இந்திய ஆஸ்திரேலிய அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி , இன்று  ராஞ்சி நகரில் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது.

5 போட்டிகள் கொண்ட இத்தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றாலும்,கடினமான சூழல்களை கடந்தே அவ்வாறான நிலையை எட்ட முடிந்தது .

எந்த தன்மை உடைய ஆடுகளம் என்றாலும் ,தற்கால சூழலில் ஒரு தொடரின் முதல் போட்டியில் 236 ரன்களை மட்டுமே வைத்துக்கொண்டு ஆட்டத்தை 48.2 ஓவர்கள் வரை நீள செய்ததும் ,இரண்டாவது போட்டியின்போது முதலில் பந்து வீசி இந்திய அணியை அதே 48.2 ஓவர்களில் சரியாக 250 ரன்களுக்கு கட்டுப்படுத்தியதும் கவனிக்க வேண்டியது அவசியம் .ஓரு சில தருணங்கள் மாறி அமைந்திருந்தால் இந்நேரம் இந்த தொடர் சமநிலையில் இருந்திருக்கும் அல்லது ஆஸ்திரேலியா முன்னிலை அடைந்திருக்கும் .ஆஸ்திரேலிய அணி ,சறுக்கல்களிலிருந்து மெல்ல மீண்டு எழ தொடங்கிவிட்டதன் தடங்கள் இவை .

இப்போதைக்கு அவர்களின் உடனடி தேவை ,ஃபிஞ்ச் குறிப்பிடத்தக்க அளவு பங்களிப்பை செய்ய வேண்டியது மற்றும் ,நடுவரிசை வீரர்கள் சீரான வேகத்தில் ஸ்டரைக் சுழற்சியை தக்க வைத்து விளையாடுவது .

தொடரில் முன்னிலை பெற்று ,தொடர் வெற்றியை நாளை உறுதி செய்யும் வாய்ப்புள்ள இந்திய அணிக்கு , அதன் இதர வீர்ரகளை களமிறக்கி பரிசோதிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது .லோகேஷ் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் உலக கோப்பைகபான முன் ஏற்பாடாக நாளை களமிறங்க வாய்ப்பு உள்ளதா அல்லது தொடரை வென்ற பின்னர் தானா என்பது கவனிக்க வேண்டிய விஷயம் .புவனேஸ்வர் குமார் அணிக்கு திரும்பியுள்ளார் .அவருக்கு வழி விட யாருக்கு ஓய்வளிக்கப்படும் என்பதும் கேள்விக்குறி ஆகும் .

இவை எல்லாவற்றையும் விட ,மண்ணின் மைந்தர் தோனி ,தன் ஊரில் கடைசி முறையாக விளையாடும் போட்டியாக இது அமையக்கூடும். ஆஸ்திரேலிய அணியில் குல்டர் நைல் விலக்கப்பட்டு ,பெஹ்ரண்டாஃப் அல்லது ரிச்சட்ஸன் ஆகியோரில் ஒருவர் களம் காணலாம் .

சற்றே மெதுவான ஆடுகளமாக அமையக்கூடும் நாளைய களம் .இரவில் மின்னோளியில் பனிப்பொழிவின் காரணமாக பந்து சறுக்கி வரும் வாய்ப்பு உள்ளது .ஆக மொத்தம் நாளைய போட்டியின் முடிவை பொறுத்தே இத்தொடரின் சுவாரசியம் நிலைபெற்று நிற்கும்.