இன்று முதல் மதுக்கடைகள் திறப்பு : “குடிமகன்”கள் கவனிக்க வேண்டிய விதிமுறைகள் ?

 

இன்று முதல் மதுக்கடைகள் திறப்பு : “குடிமகன்”கள் கவனிக்க வேண்டிய  விதிமுறைகள் ?

நாடு முழுவதும் பொதுமுடக்கம் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் பொதுமுடக்கம் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.  அதன்படி மே 17 ஆம் தேதி வரை  ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளனர்.  தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4829 ஆக உயா்ந்துள்ளது.  

tt

இதனிடையே தமிழக அரசுக்கு அதிகளவு வருவாய் ஈட்டி தரும்  மதுக்கடைகள் கிட்டதட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக மூடப்பட்டுள்ளன. இதனால் குடிமகன்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களும் அரங்கேறின. இதை தொடர்ந்து தமிழகத்தில் இன்று (மே 7)   முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு மதுபானத்தின் மீது விதிக்கப்படும் ஆயத்தீர்வை வரியினை தமிழக அரசு 15% உயர்த்தியுள்ள காரணத்தினால், நாளை முதல் மதுபானம் விலை உயரும் என்று டாஸ்மாக்  நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் மதுபான கடைகள் திறப்புக்கான விதிமுறைகளை இங்கு காண்போம்:-

  • 3 நாளைக்கு ஒருமுறை மட்டுமே ஒருவருக்கு மதுபானம் விற்க வேண்டும், 
  • வாங்குபவரின் பெயர், முகவரி, ஆதார் எண்ணுடன் ரசீது அளிக்க வேண்டும் 
  • சென்னையை சேர்ந்தவர்கள் அண்டை மாவட்டங்களுக்குச் சென்று மது வாங்கினால் கைது செய்யப்படுவர்.
  • இன்று டாஸ்மாக் திறப்பின் படி வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை என்றும்  40-50 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதியம் 1 மணி முதல் மதியம் 3 மணி வரையும், 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி என்று அறிவித்துள்ளது.