இன்று முதல் நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் !

 

இன்று முதல் நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் !

இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு அடுத்த ஆண்டு மே மாதம் 3 ஆம் தேதி நடக்கவுள்ளது.

இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு அடுத்த ஆண்டு மே மாதம் 3 ஆம் தேதி நடக்கவுள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் இன்று மாலை 4 மணி முதல் தொடங்குகின்றன. இன்று  முதல் இந்த மாதம் இறுதி அதாவது 31 ஆம் தேதிக்குள் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. அதனை,  www.ntaneet.nic.in, www.nta.ac.in இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. 

ttn

தேர்வுக்கான கட்டண விவரங்கள்:
பொதுப் பிரிவினர் : ரூ.1,500 
ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்டவர்கள்: ரூ.1,400
எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் : ரூ.800

தேர்வுக்காக விண்ணப்பிப்பவர்கள், நுழைவுத் தேர்வுக்கான கட்டணத்துடன் சேர்த்து ஜி.எஸ்.டி கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என்றும் ஜனவரி 1 ஆம் தேதி வரை தேர்வு கட்டணத்தைச் செலுத்தலாம் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. 

ttn

முந்தைய ஆண்டுகளில் நாடு முழுவதிலும் உள்ள எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவக் கல்லூரிகளில் தனித் தனியாக நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு  எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவக் கல்லூரிகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், ஜனவரி 4 ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வின் முடிவுகள் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.