இன்று முதல் சினிமா டிக்கெட் கட்டணம் குறைவு

 

இன்று முதல் சினிமா டிக்கெட் கட்டணம் குறைவு

ஜிஎஸ்டி வரி விகிதத்தில் இருந்து திரைப்பட கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதையடுத்து, திரையரங்குகளில் இன்று முதல் டிக்கெட் கட்டணம் குறைப்பு அமலாகிறது.

சென்னை: ஜிஎஸ்டி வரி விகிதத்தில் இருந்து திரைப்பட கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதையடுத்து, திரையரங்குகளில் இன்று முதல் டிக்கெட் கட்டணம் குறைப்பு அமலாகிறது.

சினிமா டிக்கெட் கட்டணங்களுக்கு நாடு முழுவதும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டது. புதுடெல்லியில் கடந்த டிசம்பர் 22ம் தேதி நடைபெற்ற 31வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் 23 பொருட்கள் மற்றும் சேவை மீதான வரி குறைக்கப்பட்டது.

அதனடிப்படையில், திரைப்பட கட்டணங்களும் குறைக்கப்பட்டுள்ளது. ரூ.100-க்கு மேல் உள்ள சினிமா டிக்கெட்டுக்கான ஜி.எஸ்.டி 28%-ல் இருந்து 18%-ஆக குறைந்துள்ளது. அதேபோல், ரூ.100-க்கு கீழ் உள்ள சினிமா டிக்கெட்டுக்கான ஜி.எஸ்.டி 18%-ல் இருந்து 12%-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் குறைப்பு இன்று முதல் அமலாகிறது. இதன் மூலம் ரூ.100-க்கு மேற்பட்ட கட்டணங்களின் விலை, ரூ.10 வரை குறையும். ரூ.100-க்கு குறைவான கட்டணங்களின் விலை ரூ.6 வரை குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.