இன்று முதல் ஒருநாள் போட்டி : இந்தியா – ஆஸ்திரேலியா இருதரப்பு தொடர் தொடங்கியது!

 

இன்று முதல் ஒருநாள் போட்டி : இந்தியா – ஆஸ்திரேலியா  இருதரப்பு தொடர் தொடங்கியது!

ஆஸ்திரேலிய அணியின் இந்திய சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரின் முதல் போட்டி ,இன்று  பிற்பகல் 1.30 மணி முதல் ஹைதராபாத் நகரில் ஆரம்பமாகியுள்ளது .முன்னர் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட இருபது ஓவர் தொடரை இந்தியா இழந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

ஹைதராபாத்: ஆஸ்திரேலிய அணியின் இந்திய சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரின் முதல் போட்டி ,இன்று  பிற்பகல் 1.30 மணி முதல் ஹைதராபாத் நகரில் ஆரம்பமாகியுள்ளது .முன்னர் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட இருபது ஓவர் தொடரை இந்தியா இழந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

உலக கோப்பை தொடர் மே மாதம் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன் இந்திய அணி விளையாட உள்ள கடைசி தொடர் இதுவாகும் .ஆஸ்திரேலிய அணியோ, இத்தொடருக்குப் பின், மற்றொரு 5 போட்டிகள் கொண்ட தொடரை ,பாகிஸ்தான் அணிக்கெதிராக ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாட உள்ளது .

இந்திய அணியை பொறுத்தவரை ,லோகேஷ் ராகுல் ,விஜய் ஷங்கர் போன்றோருக்கு இத்தொடர் நல்ல வாய்ப்பாகவும் ,குல்தீப் -சஹால் கூட்டணி ,தங்களை பலப்படுத்தி நிலைநிறுத்த ஓரு வாய்ப்பாகவும் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது . ஹர்திக் இடத்தை விஜய் ஷங்கர் நிரப்புவார் .லோகேஷ் ராகுல் சேர்க்கப்பட்டால் ,ராயுடுவின் இடம் கேள்விக்குறியாகும் 

இதனிடையே ,பயிற்சியின் போது ,வலது முன் கையில் தோனிக்கு காயம் ஏற்பட்டிருப்பதால் ,அவர் நாளைய ஆட்டத்தில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது .
ஆஸ்திரேலிய அணியில் ,இருபது ஓவர் தொடரில் விளையாடாத அலெக்ஸ் கேரி இடம்பெறுவார் .ஷான் மார்ஷ் நாளைய போட்டிக்கான அணியில் இடம்பெறாததால் ,ஆஷ்டன் 
டர்னர் ,தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்க உள்ளார் .

286 ரன்களை சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோராக கொண்டுள்ளது ஹைதபாத் “உப்பல் ” ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானம் .இதில் இரண்டு முறை (2007 மற்றும் 2009 ) விளையாடி இருமுறையும் வெற்றி பெற்றிருக்கிறது ஆஸ்திரேலியா .

ஆஸ்திரேலிய அணி வருமாறு:

ஏரோன் பிஞ்ச் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப், கிளென் மேக்ஸ்வெல், ஆஷ்டன் டர்னர், மார்கஸ் ஸ்டாய்னிஸ், அலெக்ஸ் கேரி, பாட் கமின்ஸ், நேதன் கூல்ட்டர் நைல், ஜை ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன், ஜேசன் பெஹ்ரெண்டார்ப், நேதன் லயன், ஆடம் ஸாம்ப்பா, டார்சி ஷார்ட்

கோஹ்லி (கேப்டன்), ரோகித் சர்மா (துணைக் கேப்டன்), ஷிகர் தவான், அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ் , தோனி, ஹர்திக் பாண்ட்யா, பும்ரா, முகமது ஷமி, சகால், குல்தீப், விஜய் ஷங்கர், ரிஷாப் பன்ட், சித்தார்த் கவுல், லோகேஷ் ராகுல்.

கடைசி 3 ஒருநாள் போட்டிக்கான அணி:

கோஹ்லி (கேப்டன்), ரோகித் சர்மா (துணைக் கேப்டன்), ஷிகர் தவான், அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ் , தோனி, ஹர்திக் பாண்ட்யா, பும்ரா, புவனேஷ்வர் குமார், சகால், குல்தீப், முகமது ஷமி, விஜய் ஷங்கர், ரிஷாப் பன்ட், லோகேஷ் ராகுல்.