இன்று முதல் ஆரம்பமாகும் பிளஸ் 2 தேர்வு : 8.35 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்!

 

இன்று முதல் ஆரம்பமாகும் பிளஸ் 2 தேர்வு :  8.35 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்!

8,16,359 மாணவர்கள் மற்றும் 19,166 தனித்தேர்வர்கள் எழுத உள்ளனர். அதன்படி  மொத்தம் 8,35,525 மாணவ-மாணவிகள் பிளஸ் டூ தேர்வை இன்று எழுதுகின்றனர். 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12ஆம்  வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று நடைபெறவுள்ளது.

தமிழகம் – புதுச்சேரியில் உள்ள பள்ளிகளில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வைத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 7,276 பள்ளிகளைச் சேர்ந்த 8,16,359 மாணவர்கள் மற்றும் 19,166 தனித்தேர்வர்கள் எழுத உள்ளனர். அதன்படி  மொத்தம் 8,35,525 மாணவ-மாணவிகள் பிளஸ் டூ தேர்வை இன்று எழுதுகின்றனர். 

ttn

இதற்கான சுமார் 42,000 ஆசிரியர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். முறைகேடுகளைத் தடுக்க 4,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று தொடங்கும் 12ஆம் வகுப்பு தேர்வானது வரும் 24-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

ttn

தேர்வறைக்குள் துண்டுச்சீட்டு,விடைக் குறிப்புகளை வைத்திருத்தல், விடைகளை எழுதித் தூக்கியெறிதல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர்  தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதேபோல் காப்பி அடித்தலில் ஈடுபடும் மாணவர்களுக்கு 2 ஆண்டும், வினாத்தாளை வெளியிடுவோருக்கு 3 ஆண்டும் தேர்வு எழுத தடைவிதிக்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் எச்சரித்துள்ளது.