இன்று முதல் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை : சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு !

 

இன்று முதல் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை : சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு !

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டு வரும் 24 ஆம் தேதி முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை விடுமுறை என்று அறிவிக்கப்பட்டது. 

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் முடிவடைந்து, அடுத்த செமஸ்டர் தொடங்கியுள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டு வரும் 24 ஆம் தேதி முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை விடுமுறை என்று அறிவிக்கப்பட்டது. 

ttn

ஆனால், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து அனைத்து கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் இன்று முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னை பல்கலைக்கழக மாணவர்களுக்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் விவரங்கள் மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.