இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடும் ரிசர்வ் வங்கி! மகிழ்ச்சியான செய்தியை எதிர்பார்க்கும் மக்கள்!

 

இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடும் ரிசர்வ் வங்கி! மகிழ்ச்சியான செய்தியை எதிர்பார்க்கும் மக்கள்!

இந்திய ரிசர்வ் வங்கி இன்று முக்கிய கடனுக்கான (ரெப்போ ரேட்) வட்டியை குறைக்கும் என பல்வேறு தரப்பினரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வு கூட்டம் 2 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். இந்த கூட்டத்தில் முக்கிய கடனுக்கான வட்டி நிர்ணயம் செய்வது தொடர்பான முடிவை ரிசர்வ் வங்கி எடுக்கும். சில்லரை விலை பணவீக்கத்தை மனதில் வைத்தே வட்டியை ரிசர்வ் வங்கி நிர்ணயம். கடைசியாக கடந்த ஆகஸ்ட் மாதம் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதன்படி ரிசர்வ் வங்கியின் அடுத்த நிதிக்கொள்கை ஆய்வு கூட்டம் கடந்த சில தினங்களாக நடைபெற்றது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை ரிசர்வ் வங்கி இன்று வெளியிட உள்ளது.

ரிசர்வ் வங்கி

சில்லரை விலை பணவீக்கம் கட்டுப்பாட்டு அளவுக்குள் உள்ளதால் ரிசர்வ் வங்கி வட்டியை குறைக்கும் என பலரும் எதிர்பார்க்கின்றனர். அதேசமயம் கடந்த காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 சதவீதமாக குறைந்தள்ளதால், வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் வட்டியை ரிசர்வ் வங்கி வட்டியை குறைக்கும் என நிபுணர்கள் ஆணித்தரமாக கூறுகின்றனர்.

வங்கியில் வாடிக்கையாளர்கள்

ஆகையால் இன்று ரிசர்வ் வங்கி பெரும்பாலும் வட்டியை குறைக்கும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர். ரிசர்வ் வங்கி வட்டியை குறைத்தால் வங்கிகளும் வழங்கும் கடனுக்கான வட்டியை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பெரும்பாலான வங்கிகள் கடனுக்கான வட்டியை ரெப்போ ரேட்டுடன் இணைத்து விட்டதால் ரிசர்வ் வங்கி வட்டியை குறைத்தவுடன் அதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக வழங்க வாய்ப்புள்ளது. இதனால் வாடிக்கையாளர்களின் வீடு, வாகன கடனுக்கான வட்டி செலவினம் குறையும்.