இன்று மாலை மீண்டும் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிடுகிறார்!

 

இன்று மாலை மீண்டும் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிடுகிறார்!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை மீண்டும் நிவாரண அறிவிப்புகளை வெளியிடுகிறார்.
கொரோனா பாதிப்பு காரணமாக தொழில்கள், மக்கள் முடங்கிப்போய் உள்ளனர். இதை எதிர்கொள்ள இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 10 சதவிகிதத்தை அதாவது ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் நிவாரண திட்டம் அறிவிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து நேற்று (மே13) மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முதல்கட்ட நிவாரண திட்டங்களை அறிவித்தார். அதில், சிறு குறு, நடுத்தர தொழில்துறைக்கு கடன் உதவி உள்ளிட்ட பல திட்டங்களை அறிவித்தார். மொத்தம் 3.6 லட்சம் கோடிக்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. தொடர்ந்து அறிவிப்புகள் வெளியாகும் என்று நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.

nirmala-sitharaman-78

இந்த நிலையில் இரண்டாம் கட்ட உதவிகள் பற்றிய அறிவிப்பு இன்று வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு கொரோனா பொருளாதார நிவாரண திட்டங்களை அறிவிக்க உள்ளார். இன்று முழுமையாக அறிவிப்பாரா அல்லது நாளையும் அறிவிப்பு தொடருமா என்று தெரியவில்லை.