இன்று பங்குச் சந்தைகளுக்கு வெற்றிகரமான தோல்வி! சென்செக்ஸ் 7 புள்ளிகள் உயர்ந்தது

 

இன்று பங்குச் சந்தைகளுக்கு வெற்றிகரமான தோல்வி! சென்செக்ஸ் 7 புள்ளிகள் உயர்ந்தது

இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்ற இறக்கமாகவே இருந்தது. சென்செக்ஸ் 7 புள்ளிகள் உயர்ந்தது.

தொடர்ந்து 2 வர்த்தக தினங்களாக சக்கை போடு போட்ட பங்கு வர்த்தகம் இன்று மந்தமாக இருந்தது. கடந்த 2 தினங்களில் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டதால் பல முன்னணி நிறுவனங்களின் பங்குகளின் விலை உயர்ந்து. மேலும், செப்டம்பர் மாத பங்கு முன்பேர வர்த்தக கணக்கு நாளை மறுநாள் முடிக்கப்படும் என்பதால் முதலீட்டாளர்கள் மிகவும் எச்சரிக்கையாக செயல்பட்டனர். இது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் விறுவிறுப்பின்றி முடிவடைந்தது.

பங்கு வர்த்தகம்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் நிறுவனங்களில் இன்போசிஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டெக்மகிந்திரா, டாடா மோட்டார்ஸ், மாருதி மற்றும் வேதாந்தா உள்பட 15 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேசமயம் ஸ்டேட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, எல் அண்டு டி, ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் டாடா ஸ்டீல் உள்பட 15 நிறுவன பங்குகளின் விலை சரிந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,185 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,364 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. இருப்பினும் 146 நிறுவனங்களின் பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.148.73 லட்சம் கோடியாக குறைந்தது. நேற்று வர்த்தகம் முடிவடைந்தபோது நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.148.89 லட்சம் கோடியாக இருந்தது.

தேசிய பங்குச் சந்தை

இன்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 7.11 புள்ளிகள் உயர்ந்து  39,097.14 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 12 புள்ளிகள் குறைந்து 11,588.20 புள்ளிகளில் நிலை கொண்டது.