இன்று நான்காவது ஒருநாள் போட்டி : ஞாயிறு தர போகும் ஒளி யாரை சேரும் ?

 

இன்று நான்காவது ஒருநாள் போட்டி : ஞாயிறு  தர போகும் ஒளி யாரை சேரும் ?

இந்திய ஆஸ்திரேலிய அணிகள் இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி, மொகாலி நகரில் இன்று  நடைபெறுகிறது .

மொகாலி: இந்திய ஆஸ்திரேலிய அணிகள் இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி, மொகாலி நகரில் இன்று  நடைபெறுகிறது .

பொதுவாக கிரிக்கெட்டில் நடக்கும் இருதரப்பு ஒருநாள் தொடர்களில் பெரும்பாலானவை அர்த்தம் பொதிந்ததாகவோ அல்லது சுவாரசியமானதாகவோ இருப்பதில்லை .5 போட்டிகள் கொண்ட தொடர்களில் பல நான்கவது போட்டிக்கு முன்பே “உயிர் ” இழந்து விடுகின்றன .

ஓருவேளை நான்காவது போட்டிக்குப் பின் தொடர் சமன் ஆகும் நிலை ஏற்பட்டால் ,ரசிகர்களுக்கு அதை விட பெரும் மகிழ்ச்சி எதுவுமில்லை .கடந்த போட்டியில் பெற்ற வெற்றியால் தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு அப்படி ஒரு சூழல் வசப்பட்டிருக்கிறது .அதே காரணத்தால் அவர்களின் XIல் மாற்றம் செய்ய வேண்டிய தேவையும் பெரும்பாலும் இருக்காது.

தோனிக்கு கடைசி 2 போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டிருப்பது , ,தொடர் வெற்றி என்பதை தாண்டி ,உலக கோப்பைக்கான முன் தயாரிப்பில் இந்திய அணி முனைப்பு காட்டுவதைத் தெளிவுபடுத்தும் விஷயங்கள் .

தோனிக்கு பதில் ரிஷப் பந்த் இடம்பெறுவார் .லோகேஷ் ராகுலுக்கு இடம் கிடைத்தால் வழிவிட போகும் நபர் தவனா அல்லது ராயுடுவா என்பது கேள்விக்குறி .அதேபோல புவனேஸ்வர் குமார் இடம்பெற்றால் ஷமி அல்லது பும்ரா இருவரில் யாருக்கு ஓய்வு தரப்படும் என்பது கவனிக்க வேண்டிய மற்றொரு அம்சம் .

தாமதமாக அணிக்குள் நுழைந்தாலும் ,அணியில் முக்கிய இடத்தை பிடித்துள்ள விஜய் ஷங்கர் பேட்டிங் ,பந்துவீச்சு இரண்டிலுமே ,மிக கடினமான சூழல்களை விரைவிலேயே எதிர்கொள்ளும் நிலைக்கு ஆக்கியுள்ளார் .

அவருக்கு தன் ஆற்றலை நிரூபிக்க மேலும் இரு வாய்ப்புகள் உள்ளன .அதை வைத்தே அவர் உலக கோப்பையில் விளையாடவுள்ள குழுவுக்குத் தேர்வு செய்யப்படுவாரா என்பது தெரியும் .ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஸாம்பா ,ஆட்டத்தின் நடுப்பகுதியில் சிறப்பாக பந்துவீசி ,இந்திய அணியின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி ,கவனிக்கத்தக்க வீரராக மாறியுள்ளார் குறிப்பாக விராட் கோலி இத்தொடரில் இருமுறை ஸாம்பா பந்துவீச்சில் ஆட்டமிழந்துள்ளார் .

கடந்த அக்டோபர் மாதம் 24ஆம் தேதியன்று விசாகப்பட்டினத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக அடித்த சதத்தின் ஊடாக , ஒருநாள் போட்டிகளில் 10000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய கோலி ,மேலும் 12 போட்டிகளுக்குப் பிறகு ,வியக்கத்தக்க வகையில் 10,816 என தனது ரன் கணக்கை உயர்த்தியுள்ளார் . அதிக ரன் குவிக்க வாய்ப்புள்ள தட்டையான ஆடுகளம் ,யாருக்கு பலன் தரும் என்பது இன்று தெரியும்.