இன்று நள்ளிரவு முதல் விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனை இந்தியாவில் தொடங்குகிறது

 

இன்று நள்ளிரவு முதல் விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனை இந்தியாவில் தொடங்குகிறது

இன்று நள்ளிரவு முதல் (மார்ச்.5) விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனை இந்தியாவில் தொடங்குகிறது.

மும்பை: இன்று நள்ளிரவு முதல் (மார்ச்.5) விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனை இந்தியாவில் தொடங்குகிறது.

இந்தியாவில் கடந்த மாதம் விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து இதன் ப்ரீ-புக்கிங் விற்பனை நடந்து வந்தது. சுமார் ஒரு லட்சம் ஸ்மார்ட்போன்கள் இந்த முறையில் முன்பதிவு செய்யப்பட்டிருப்பதாக விவோ நிறுவனம் அறிவித்தது. இந்நிலையில், இன்று நள்ளிரவு முதல் (மார்ச்.5) விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனை இந்தியாவில் தொடங்குகிறது. அமேசான் இந்தியா, ஃபிளிப்கார்ட், பேடிஎம் மால், விவோ ஆன்லைன் ஸ்டோர் ஆகியவற்றில் விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனை தொடங்குகிறது. நாளை முதல் அதாவது மார்ச் 6-ஆம் தேதி முதல் ஆஃப் லைன் ஷோரூம்களில் கிடைக்கும்.

டோப்பாஸ் புளு மற்றும் ரூபி ரெட் ஆகிய இருவிதமான நிறங்களில் கிடைக்கும் இதன் விலை ரூ.28,990 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் வலைதளங்களில் மார்ச் 8-ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் வரிசையில் 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளே, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ஃபன்டச் ஓ.எஸ். 9, டூயல் சிம் ஸ்லாட், 48 எம்.பி + 5 எம்.பி + 8 எம்.பி டிரிபிள் ரியர் கேமரா செட்டப், எல்.இ.டி ஃபிளாஷ், 32 எம்.பி செல்ஃபி கேமரா, 3.5 எம்.எம் ஆடியோ ஜாக், டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத், 3700 எம்.ஏ.ஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களாக 48 எம்.பி ரியர் கேமரா, 32 எம்.பி பாப்-அப் செல்ஃபி கேமரா, இன்-டிஸ்ப்ளே விரல்ரேகை சென்சார், டூயல் டர்போ கேமிங் மோட் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும் இதில் உள்ள பாப்-அப் செல்ஃபி கேமரா 0.46 நொடிகளில் மேலே எழும்புகிறது. இந்த அம்சம் சுமார் 3 லட்சம் முறை சோதனை செய்யப்பட்டதாக விவோ நிறுவனம் தெரிவித்துள்ளது.