இன்று தொடங்கும் ஐபிஎல் போட்டிகளில் வீரர்களுக்கு இத்தனை கட்டுபாடுகளா?

 

இன்று தொடங்கும் ஐபிஎல் போட்டிகளில் வீரர்களுக்கு இத்தனை கட்டுபாடுகளா?

ஐபிஎல் திருவிழா இன்று இரவு 7.30 மணிக்கு கோலாகலமாகத் தொடங்க விருக்கிறது. கொரோனாவால் ஒத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடைபெறுகிறது. கிட்டத்தட்ட ஒரு மாதம் முன்பே வீரர்கள் வந்து, கொரோனா பரிசோதனை செய்துகொண்டு பயிற்சி எடுத்து வருகின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் குழுவில் 13 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் என ரிசல்ட் வந்ததும் பதறினார்கள். தற்போது அவர்கள் கொரோனாவிலிருந்து மீண்டு பயிற்சி எடுத்து வருகிறார்கள். கொரோனா பாதித்த தீபக் சாஹர் இன்றைய போட்டியில் ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று தொடங்கும் ஐபிஎல் போட்டிகளில் வீரர்களுக்கு இத்தனை கட்டுபாடுகளா?

முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இண்டியன்ஸை எதிர்கொள்கிறது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் டீம். சென்ற ஆண்டில் ஒரே ஒரு ரன்னில் கோப்பையைத் தவற விட்டது சென்னை சூப்பர் கிங்ஸ்.

கிரிக்கெட் விளையாட்டை பொழுதுபோக்குடன் அளிப்பதே ஐபிஎல். அதுவும் ஐபிஎல் ஸ்பெஷல் மியூசிக் ஒலித்ததும், அரங்கில் இருக்கும் ரசிகர்களின் உற்சாகக் கூச்சல் வீரர்களுக்கு தனி ஊக்கத்தை அளிக்கும். ஆனால், கொரோனா பாதுகாப்பு காரணமாக ரசிகர்கள் இல்லாமல் போட்டிகள் நடக்கவிருக்கின்றன.

இன்று தொடங்கும் ஐபிஎல் போட்டிகளில் வீரர்களுக்கு இத்தனை கட்டுபாடுகளா?

ஐபிஎல் போட்டியில் கொரோனா வைரஸ் பரவமால் இருக்க சில கட்டுப்பாடுகளை நிர்வாகம் விதித்துள்ளது.

அனைத்து வீரர்களும் மைதானத்திற்குள் நுழையும் வரை அதாவது போட்டித் தொடங்கும் வரை மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்பது கட்டாயம்.

அடுத்து போட்டியில் யார் பேட்டிங், யார் பவுலிங் என்பதைத் தீர்மானிக்கும் டாஸ் போடும்போது கேப்டன்கள் கைக்குலுக்கக்கூடாது.

இன்று தொடங்கும் ஐபிஎல் போட்டிகளில் வீரர்களுக்கு இத்தனை கட்டுபாடுகளா?

விக்கெட் விழும்பட்சத்தில் அணி வீரர்கள் கட்டிக்கொள்ளக்கூடாது. அதேபோல பேட்ஸ்மேன் ஏதேனும் சாதனை ரன்களைத் தொட்டாலும் கட்டியணைத்து வாழ்த்தக்கூடாது.

போட்டியின்போது விடப்படும் இடைவெளியில் கூல்ட்ரிங்ஸ் குடிக்கும் முன் கைகளை சானிடைஸரால் சுத்தம் செய்துகொள்ள வேண்டும். போட்டியின் இடையில் பேட் அல்லது கிளவுஸ் உள்ளிட்டவை மாற்றிக்கொள்ள விரும்பினால், அதைக் கொண்டு வரும் வீரர் தம் கைகளை சானிடைஸரால் சுத்தம் செய்துகொண்டே உள்ளே செல்ல வேண்டும். அவற்றை வாங்கும் வீரரும் கைகளைச் சுத்தம் செய்துகொண்ட பிறகே வாங்க வேண்டும்.

இன்று தொடங்கும் ஐபிஎல் போட்டிகளில் வீரர்களுக்கு இத்தனை கட்டுபாடுகளா?

இத்தனை கட்டுப்பாடுகளோடு வீரர்களால் வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுதுவதைத் தவிர்க்க முடியவில்லை.