இன்று சோமவார பிரதோஷ வழிப்பாட்டில் உச்சரிக்க வேண்டிய மந்திரம்

 

இன்று சோமவார பிரதோஷ வழிப்பாட்டில் உச்சரிக்க வேண்டிய மந்திரம்

உடலும், மனமும் ஆரோக்கியமடைகிறது. நம் குடும்பத்தில் அமைதியும்,மகிழ்ச்சியும் பெருகும்.

பிரதோஷ வேளையில் தான், நந்தியின் கொம்புகளுக்கு இடையில் சிவன் நின்று அழகிய தாண்டவம் ஆடுகிறார். பொதுவாக எல்லா பிரதோஷங்களும் தனி சக்தி வாய்ந்தவை என்றாலும், சிவபெருமானுக்கு உகந்த திங்கட்கிழமையில் வருகிற பிரதோஷம் கூடுதல் சக்தி வாய்ந்தது. 

siva

சிவன், நந்தியின் கொம்புகளுக்கிடையில் ஆடுகின்ற ஆனந்த தாண்டவத்தை. முக்கோடி தேவர்களும், முனிவர்களும் கூடி நின்று பக்தி பரவசத்துடன் இந்த பிரதோஷ வேளையில் கண்டுக் களிக்கிறார்கள்.
இதுவரை பிரதோஷ வழிப்பாடு பற்றி அறியாதவர்கள், இன்று மாலை அருகில் உள்ள சிவாலயங்களுக்குச் சென்று நந்திக்கு நடைபெறும் பூஜையைக் கண்ணார கண்டு களியுங்கள். பிரதோஷ வேளையின் மகிமையை அறிந்தவர்கள், சிவனின் அளவில்லா கருணைக்கு பாத்திரமாக எல்லா பிரதோஷ வேளையிலும், விரதமிருந்து, பூஜைகளைச் செய்கிறார்கள். 

shiva

பிரதோஷ வேளையில், நந்தி தேவருக்கு நடைபெறும் பூஜைகளையும், அபிஷேகத்தையும் ஓர் ஓரமாய், அமைதியாய், நின்று பார்த்து ரசித்து மனதுள் ஆனந்த தாண்டவமாடுகின்ற ஈசனை இருத்தி, இந்த மந்திரத்தைச் சொல்லி வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் அடுத்த பிரதோஷ காலத்திற்குள் ஏற்றம் வந்து சேரும். 

பிரதோஷ வேளையில் உச்சரிக்க வேண்டிய பஞ்சாக்ஷர மந்திரம்!

sivan

‘ஓம் நமச்சிவாய’
இந்த மந்திரத்தின் மகிமையே தனி. இதனை உச்சரிப்பதினால் நமது முன்னேற்றத்தை தடுக்கும் கர்ம வினைகள் அதுவாகவே அகன்று விடுகிறது. உடலும், மனமும் ஆரோக்கியமடைகிறது. நம் குடும்பத்தில் அமைதியும்,மகிழ்ச்சியும் பெருகும். நம்மை எதிரிகளாக நினைப்பவர்கள், அவர்களாகவே நமது பாதையிலிருந்து விலகிச் சென்று விடுவார்கள். 

பிரதோஷ காலத்தில் கீழ் காணும் ஸ்லோகத்தை 18 முறை சொல்லவேண்டும்.

shiva

ஸித்தயோகீ மஹர்ஷிச்ச
ஸித்தார்த்தஹ் ஸித்த ஸாதக|
பிக்ஷூச்ச பிக்ஷூரூபச்ச 
விபனோம்ருது ரவ்யய:
இன்மையிலும் நன்மை தருவார் பிரதோஷ மூர்த்தி !
திருச்சிற்றம்பலம் !
தென்னாடுடைய சிவனே போற்றி !
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !
மேற்படி தொடர்ந்து பிரதோஷ விரதமிருந்து வந்தால், எல்லா வளமும் நிச்சயம் உங்கள் வாழ்வில் ஏற்படுவதை உணரலாம்.