இன்று குறைவற்ற வருமானம் தரும் தேய்பிறை அஷ்டமி சொர்ண பைரவர் வழிபாடு!

 

இன்று குறைவற்ற வருமானம் தரும் தேய்பிறை அஷ்டமி சொர்ண பைரவர் வழிபாடு!

இன்று மதியம் 3.18 மணி முதல் நாளை 4.10 மணி வரையில்  தேய்பிறை அஷ்டமி திதி இருக்கிறது.  இந்த தேய்பிறை அஷ்டமி காலத்தில் மஹா கால பைரவப் பெருமானை வணங்கி வழிபடலாம். அப்படி குறிப்பிட்ட நேரத்தில் அவரை வழிபட இயலாதவர்கள் அல்லது விரைவான பலன்களைப் பெற விரும்புவோர் குளிகை காலத்தில் மஹா கால பைரவப் பெருமானைத் துதிக்கலாம்.

இன்று மதியம் 3.18 மணி முதல் நாளை 4.10 மணி வரையில்  தேய்பிறை அஷ்டமி திதி இருக்கிறது.  இந்த தேய்பிறை அஷ்டமி காலத்தில் மஹா கால பைரவப் பெருமானை வணங்கி வழிபடலாம். அப்படி குறிப்பிட்ட நேரத்தில் அவரை வழிபட இயலாதவர்கள் அல்லது விரைவான பலன்களைப் பெற விரும்புவோர் குளிகை காலத்தில் மஹா கால பைரவப் பெருமானைத் துதிக்கலாம். நாளை, வியாழக்கிழமை இராகு காலம் மதியம் 1.30 மணி முதல் 3 மணி வரை இருக்கின்றது. குளிகை காலம் காலை 9 மணி முதல் 10.30 மணி வரை அமைந்திருக்கிறது. இந்த குறிப்பிட்ட நேரத்தில், கால பைரவரை வணங்கி உங்களுடைய செல்வ நிலையை உயர்த்திக் கொள்ளுங்கள். 

kaala bairavar

பொதுவாகவே,  இந்த தேய்பிறை அஷ்டமி திதி இருக்கும் நேரத்தில் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவப் பெருமானை வழிபட்டால் அடுத்த ஒரு மாதத்திற்கு நிச்சயமாக பணக் கஷ்டம் இருக்காது. 
டாப் தமிழ் நியூஸ் வாசகர்களுக்காக தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிகளில் பட்டியலைக் கொடுத்திருக்கிறோம். உங்களுக்கு அருகில் இருக்கும் ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவரை தரிசித்து வாழ்வில் வளம் பெறுங்கள். இந்த பக்கத்தை உங்களது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் ஷேர் செய்து கொள்ளுங்கள். அஷ்டமி தினங்களில் நீங்கள் பயணத்தில் இருந்தாலும், அருகில் இருக்கும் ஆலயத்திற்குச் செல்வதற்கு உதவியாக இருக்கும். 1. திருவண்ணாமலை கோவிலின் உள்பிரகாரத்தில் ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் வீற்றிருக்கிறார்.
2. காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கியில் இருக்கிறார். சாலை வசதிகள் சரிவர இருக்காது. இருபத்தைந்து கி.மீ. தூரத்துக்கு கரடு முரடான சாலையாக இருக்கும். ஆட்டோவில் மட்டுமே பயணிக்கமுடியும். ஆட்டோ வசதி உண்டு.
3. சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்
4. ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள் இருக்கிறார். இங்கு மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்.
5. சென்னை பள்ளிக்கரணையில் அருள்மிகு சாந்தநாயகி சமேத ஆதிபுரீஸ்வரர் திருக்கோவில். தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி செல்லும் சாலையில் அமைந்து இருக்கிறது.
6. சென்னை தாம்பரத்தில் இருந்து வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெய துர்கா பீடம். (படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)
7. திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை
8.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார் சாலையில் இருக்கிறது.
9. திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்.
10. காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி. கொங்கண சித்தரின் ஜீவசமாதி இந்த இடம்.

swarna bairavar

11. நங்கநல்லூரில் இருக்கும் அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்.
12. கோவை காந்திபுரத்தில் இருக்கும் அருள்மிகு சவுடேஸ்வரி அம்மன் கோவில்.
13. பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி. ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமையான ஆலயம் இது.
14. தஞ்சாவூர், நஞ்சிக்கோட்டை சாலையில் இருக்கும்  ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி.
15. கரூர் சேங்கல் மலையில், ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில் இருக்கும் ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில். கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலத்தில் இறங்கி, அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்
16. பாண்டிச்சேரி, தவளக்குப்பம் அருக்கில் இருக்கும் ஸ்ரீ விஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில். பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் நிறுத்தத்தில் இறங்கினால், அங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.
17. அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ. தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி. இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவ சித்தர் நிறுவிய ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது. இதுதான் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் உதயமான இடம்.  இங்கே இருக்கும்   பொற்றளி  பைரவர் தான் ஸ்ரீ  சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்!
18. நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்
19. கோவை ஆர்.எஸ்.புரம் அருகில் இருக்கும் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் வளாகத்தில் சொர்ண பைரவர் இருக்கிறார். 
20. வேலூர் மாவட்டம் காங்கேயநல்லூரில் அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்.
21. சென்னை அடையார் மத்ய கைலாஷ் கோவிலில் இருக்கிறார். அருகிலேயே ரயில் நிலையம் இருக்கிறது. 

swarna bairavar

22. வாலாஜாபேட்டை வன்னிவேடு அருகில் இருக்கும் ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்.
23. துறையூர் முருகன் கோவில் வளாகத்தில் ஸ்ரீ  சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி.
24. மேற்கு முகப்பேரில் இருக்கும் ஸ்ரீ கனக துர்கா ஆலயம்.
25. திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக் கொம்பு கிராமம் ஸ்ரீ சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்தி வாய்ந்த ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது
26. ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில், மணப்பாக்கம்,சென்னை.
27. தூத்துக்குடி, திசையன்விளையில் இருக்கும் அருள்மிகு வாலை குருசாமி ஜீவசமாதி கோவில்.
28. குடியாத்தத்தில் இருக்கும் அருள்மிகு பவானேஸ்வரர் திருக்கோவில்.
29. மதுரை அருள்மிகு தெப்பக்குளம் மாரியம்மன் கோவில்.
30. மானாமதுரையில் இருக்கும் அருள்மிகு பஞ்சமுக ப்ரத்யங்கராதேவி கோவில் வளாகம்.
ஒரு வேளை உங்களின் ராசிக்கு சனி கிரகத்தின் தாக்கம் அதிகமிருந்தால், இந்த ஆலயங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் பின்வரும் மந்திரத்தை வீட்டில் அல்லது அருகில் அமைந்திருக்கும் சிவபெருமான் ஆலயத்தினுள் ஸ்ரீகால பைரவ சன்னதியில் ஜபிக்கலாம். இந்த மந்திரத்தை ஒரு வெள்ளைத் தாளில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷ்ணாய தீமஹி
தன்னோஹ் சொர்ணாகர்ஷண பைரவப் ப்ரசோதயாத்
இதை தினமும் வீட்டிலேயே 33 முறைகள் ஜபித்து வரலாம். அடுத்த தேய்பிறை அஷ்டமி, அடுத்த மாதம் 23ம் தேதி வெள்ளிக்கிழமை முழுவதும் இருக்கிறது. இன்றே குறித்து வைத்துக் கொள்ளுங்கள். மாத மாதம் தேய்பிறை அஷ்டமி வழிபாடு செய்வது உங்களது பண கஷ்டத்தை நிச்சயமாக நீக்கும்.