இன்று உலக முதியோர் தினம்; இறந்து கிடந்த மூதாட்டி உடலை குப்பை வண்டியில் தூக்கி சென்ற கொடுமை

 

இன்று உலக முதியோர் தினம்; இறந்து கிடந்த மூதாட்டி உடலை குப்பை வண்டியில் தூக்கி சென்ற கொடுமை

உலகம் முழுவதும் இன்று முதியோர் தினம் கொண்டாடப்படும் சூழலில் தஞ்சையில் சாலையோரம் இறந்து கிடந்த மூதாட்டியின் உடலை குப்பை வண்டியில் ஏற்றி சென்ற கொடுமை நடந்துள்ளது.

தஞ்சாவூர்: உலகம் முழுவதும் இன்று முதியோர் தினம் கொண்டாடப்படும் சூழலில் தஞ்சையில் சாலையோரம் இறந்து கிடந்த மூதாட்டியின் உடலை குப்பை வண்டியில் ஏற்றி சென்ற கொடுமை நடந்துள்ளது.

உலகம் முழுவதும் இன்று முதியோர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. வாழ்நாட்கள் முழுவதும் தனது உடல் தேய, வயது தேய உழைத்தவர்களை, வாழ்ந்தவர்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அவர்களது குடும்பத்தினரே அனாதை ஆக்கிவிடுகிறார்கள். எனவே உலகம் முழுவதும் உள்ள மூத்த குடிமக்களின் உரிமைகளை மதிக்க, நலன்களை பாதுகாத்து போற்ற ஆண்டுதோறும் அக்டோபர் 1-ம் தேதியை உலக முதியோர் தினமாக கொண்டாட ஐநா சபை கடந்த 1991-ம் ஆண்டு அறிவித்தது. 

இந்நிலையில், இன்று அதிகாலை தஞ்சாவூரில் சாலையோரத்தில் வயதான மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்தார். அவரை பார்த்த பொதுமக்கள் ஈவிரக்கமன்றி கண்டும் காணாமலும் சென்றனர். இதேபோல் சில மணி நேரங்கள் கடந்ததும் மூதாட்டியின் உடலை எடுத்துச் செல்வதற்காக அமரர் ஊர்தியோ, ஆம்புலன்ஸோ வராமல் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் அந்த இடத்திற்கு வந்தனர். அதனையடுத்து இறந்து போன மூதாட்டியின் உடலை அவர்கள் குப்பை வண்டியில் ஏற்றி சென்றனர். அந்த மூதாட்டியின் பெயர், விலாசம் குறித்த எந்த விபரங்களும் வெளியாகவில்லை.

உலக முதியோர் தினம் கொண்டாடப்படும் இன்றைய நாளில் ஒரு மூதாட்டி சாலையோரத்தில் அனாதையாக இறந்து கிடந்ததும் அவரது உடல் குப்பை வண்டியில் ஏற்றி செல்லப்பட்டதும் கொடுமையின் உச்சம் என பல்வேறு தரப்பினர் தங்களது சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.