இன்று உலக செவிலியர்கள் தினம் : நிறைமாத கர்ப்பிணியாக மக்களுக்கு சேவை செய்யும் ஓர் செவிலியரின் கதை!

 

இன்று உலக செவிலியர்கள் தினம் : நிறைமாத கர்ப்பிணியாக மக்களுக்கு சேவை செய்யும் ஓர் செவிலியரின் கதை!

ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  

சீனாவில் கடந்த  ஆண்டு டிசம்பர் மாதம் உருவான  கொரோனா வைரஸ் தற்போது  200ற்கும் மேற்பட்ட  நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  

rr

இதுவரை உலகம் முழுவதும் 41லட்சத்து 68ஆயிரத்து 427பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 2லட்சத்து 85ஆயிரத்து 445பேர் பலியாகி  உள்ளனர் . மேலும் 14லட்சத்து 52ஆயிரத்து 626 பேர் குணமாகியுள்ளனர். இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 70,756 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 22,455 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,293 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இந்த இக்கட்டான சூழலிலும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள் என பலரும் களம்கண்டு பணிபுரிந்து வருகிறார்கள். 

rr

அந்த வகையில் கர்நாடக மாநிலம் கஜனுரு கிராமத்தைச் சேர்ந்தவர் ரூபா என்ற 9 மாத கர்ப்பிணி செவிலியராக  ஜெயசமராஜேந்திரா அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.  கர்ப்பிணியாக இருக்கும் நேரத்தில் தினமும் மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள நோயாளிகளை அக்கறையுடன் கவனித்து வருகிறார். இக்கட்டான காலக்கட்டத்திலும் தன்னலம் இன்றி செயல்பட்டு வரும் செவிலியர் ரூபாவுக்கு பலரும் வாழ்த்து கூறி வருகிறார்கள். 

t

குறிப்பாக இன்று உலக செவிலியர்கள் தினம் என்பதால் ரூபா மட்டுமின்றி கொரோனா தடுப்பு பணியில் பணிபுரிந்து வரும் அனைத்து செவிலியர்களுக்கும் நம் வாழ்த்து மற்றும் நன்றியை தெரிவித்து கொள்ளலாம்.