இன்று இரவு மாஸ்டர் படத்தின் மூன்றாவது பாடல் வெளியிடப்படும்… படக்குழுவினரின் அறிவிப்பால் உற்சாகத்தில் ரசிகர்கள்!

 

இன்று இரவு மாஸ்டர் படத்தின் மூன்றாவது பாடல் வெளியிடப்படும்… படக்குழுவினரின் அறிவிப்பால் உற்சாகத்தில் ரசிகர்கள்!

பிகில் திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் மாஸ்டர்  படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். த்ரில்லர் பாணியில்  உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும் நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ். விஜே ரம்யா,கௌரி கிஷன்  உள்ளிட்ட பலர்  நடிக்கின்றனர்.

பிகில் திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் மாஸ்டர்  படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். த்ரில்லர் பாணியில்  உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும் நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ். விஜே ரம்யா,கௌரி கிஷன்  உள்ளிட்ட பலர்  நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லி, கர்நாடகா, சென்னை, நெய்வேலியில் நடைபெற்றது.  மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 15 ஆம் தேதி லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெறவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அன்றைய தினம் மாலை 6.30 மணிக்கு படத்தின் இசைவெளியீட்டு விழா நேரலையாக ஒளிபரப்படும் என்று சன்டிவி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இவ்விழாவில் திரைத்துறை பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் மட்டுமே கலந்து கொள்ளவுள்ளனர். 

Master

மாஸ்டர் படத்தின் இரு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாடல் இன்று இரவு 8.30 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.