இன்றும் விசாரணைக்கு ஆஜராகிறார் பிரியங்கா காந்தி கணவர் ராபர்ட் வதேரா

 

இன்றும் விசாரணைக்கு ஆஜராகிறார் பிரியங்கா காந்தி கணவர் ராபர்ட் வதேரா

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் பிரியங்கா காந்தி கணவர் ராபர்ட் வதேராவிடம் நேற்று 6 மணிநேரம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். அதைதொடர்ந்து இன்றும் அவர் ஆஜராகிறார்.

புதுதில்லி: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் பிரியங்கா காந்தி கணவர் ராபர்ட் வதேராவிடம் இரண்டாவது நாளாக விசாரணை நடைபெற உள்ளது.

லண்டனின் பிரையன்ஸ்டன் சதுக்கம் பகுதியில் பிரியங்கா காந்தியின் கணவர் வதேராவிற்கு வீடு உள்ளதாவும், அச்சொத்து சட்ட விரோத பணப்பரிமாற்றம் மூலம் வாங்கப்பட்டதாகவும் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. இவ்வழக்கில் வதேராவை கைது செய்ய வரும் 16-ஆம் தேதி வரை டெல்லி நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

priyaka

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக முதன்முறையாகத் தில்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா ஆஜரானார். அவருடன் அவரது மனைவி பிரியங்கா காந்தியும் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, அவர் என் கணவர், அவர் என் குடும்பம். அவருக்கு நான் ஆதரவளிக்கிறேன். ஏன் இது நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்’என்றார்.

priyanka

சுமார் 6மணிநேரம் நடந்த இந்த விசாரணையில் இதையடுத்து லண்டனில் உள்ள அசையா சொத்துகள் எப்படி வாங்கப்பட்டன..? பணப்பரிமாற்றங்கள் எப்படி நடந்தது..? யாருக்கெல்லாம் இதில் தொடர்புள்ளது..? என்பது உள்ளிட்ட கேள்விகளை வதேராவிடம் அதிகாரிகள் கேட்டதாகத் தெரிகிறது. 

இந்நிலையில்  அடுத்தகட்ட விசாரணைக்காக இன்று காலை 10.30 மணிக்கு மீண்டும் ராபர்ட் வதேரா அமலாக்கத்துறை முன்பு ஆஜராக உள்ளார். இதனிடையே மற்றொரு வழக்கிலும் வரும் 12ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் வதேரா ஆஜராக உள்ளது குறிப்பிடத்தக்கது.