இன்றுடன் நிறைவு பெறும் அத்தி வரதர் தரிசனம்: வரலாறு காணாத கூட்டத்தை காஞ்சிபுரத்தில் அலைமோத வைத்த சுவாரஸ்யம்!

 

இன்றுடன் நிறைவு பெறும்  அத்தி வரதர் தரிசனம்: வரலாறு காணாத  கூட்டத்தை காஞ்சிபுரத்தில் அலைமோத வைத்த சுவாரஸ்யம்!

வரலாறு காணாத கூட்டத்தைக் காஞ்சிபுரத்திற்கு வரவழைத்த அத்தி வரதர் தரிசனம் இன்றுடன் நிறைவடைகிறது. 

இன்றுடன் நிறைவு பெறும்  அத்தி வரதர் தரிசனம்: வரலாறு காணாத  கூட்டத்தை காஞ்சிபுரத்தில் அலைமோத வைத்த சுவாரஸ்யம்!

காஞ்சிபுரம்: வரலாறு காணாத கூட்டத்தைக் காஞ்சிபுரத்திற்கு வரவழைத்த அத்தி வரதர் தரிசனம் இன்றுடன் நிறைவடைகிறது. 

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீருக்குள் இருக்கும் அத்தி வரதரை  வெளியே எடுத்து, ஒரு மண்டலம் பூஜை செய்து மீண்டும் அனந்த சரஸ் குளத்தில் வைத்துவிடுவது வழக்கம். அதன்படி அத்தி வரதர் விழா கடந்த 1-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. தற்போது அத்தி வரதர் நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார். 

athivaradhar

இந்நிலையில் அத்தி வரதர் தரிசனம் இன்றுடன் முடிவடைகிறது. இதனால் காஞ்சிபுரத்திற்கு 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதன் காரணமாக முன்னேற்பாடு நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளன. முதற்கட்டமாகக் கோவிலிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் 3 கூடாரங்களும், கோவிலை ஒட்டி 3 கூடாரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் வரும் பக்தர்கள் பேருந்து மூலம் கோயிலுக்கு அழைத்து வரப்படவுள்ளனர். அதேபோல் 40 இடங்களில் அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து கூறியுள்ள மாவட்ட நிர்வாகம், காஞ்சிபுரத்தில் அத்தி  வரதரை தரிசிக்க வரும்  அனைவரும் அத்தி வரதரைத் தரிசித்த பிறகே வைபவம் நிறைவடையும். 17ஆம் தேதி அதிகாலையில் தரிசனம் நிறுத்தப்பட்டு, கோவில் வளாகத்திலிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டு, ஆகம விதிப்படி அனந்தசரஸ் குளத்திற்குள் அத்தி வரதரை வைப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.