இன்றரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு

இன்றரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று இரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் தனிமைப்படுத்தப்படுகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று இரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் தனிமைப்படுத்தப்படுகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனாவால் நாடு 21 நாட்களுக்கு முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இந்தியரும் எனக்கு முக்கியம், எனவே ஊரடங்கிற்கு ஒத்துழைக்க வேண்டும். மருத்துவர்கள் தவிர மற்ற யாருக்கும் ஊரடங்கின் போது அனுமதியில்லை

Modi

கொரோனாவை அலட்சியப்படுத்தக்கூடாது.  சமூக விலகல் தவிர்க்க முடியாது. ஒவ்வொரு இந்தியருக்கும் பொறுப்புள்ளது. கொரோனா நம்மை தாக்காது என யாரும் நினைக்கக்கூடாது, பெரியவர், வியாபாரிகள், குழந்தைகள் என அனைவரும் இணைந்து கொரோனாவை எதிர்கொள்ள வேண்டும். ஒவ்வொரு இந்தியருக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன், அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும். கொரோனாவை விளையாட்டாக நினைக்காதீர்கள்; ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பொறுப்பு இருக்கிறது. கொரோனாவை சமாளிக்க சமூக விலகல் ஒன்று தான் சரியான தீர்வு. கொரோனா யாரையும் விட்டுவைப்பதில்லை. நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், மக்கள் சுய கட்டுப்பாடுடன் இல்லையென்றால் நாம் அனைவரும் அழிவை சந்திக்க நேரிடும். கொரோனாவை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். உறவினர்களைகூட வீட்டிற்குள் அனுமதிக்கக்கூடாது. கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்துவருகிறது” என தெரிவித்தார்.