இன்னொருத்தரின் கள்ளக் காதலிக்கு திருமணம் செய்து வைத்தவர் கொலை பெண் உள்பட 9 பேர் சிறைவாசம் சென்ற பரிதாபம்

இன்னொருத்தரின் கள்ளக் காதலிக்கு திருமணம் செய்து வைத்தவர் கொலை பெண் உள்பட 9 பேர் சிறைவாசம் சென்ற பரிதாபம்

மதுரை மாவட்டத்தில் வேறு ஒருவருடன் வாழ்ந்து வந்த பெண்ணை இன்னொருவருக்கு மணமுடித்து வைத்த பாவத்திற்காக இளைஞர் கொடூர படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மதுரை ஆத்திக்குளம் பகுதியை சேர்ந்த குருநாதசேதுபதி என்பவர் சில தினங்களுக்கு ஆயுதப்படை மைதானத்தில் கொடூரமாக கொல்லப்பட்டார்.   இது குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிந்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் சிம்மக்கல் அனுமன் கோவில் படித்துறையில் மர்ம நபர்களால் தாக்கப்ட்ட மகேஸ்வரி என்பவருக்கு திருமணம் செய்ய உதவியதால்தான் குருநாதசேதுபதி கொல்லப்பட்டது தெரியவந்தது.

maheshwari

இந்த வழக்கில் போலீஸ் நடத்திய விசாரணையில் முடக்கத்தான் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவருடன் திருமணம் செய்த கொள்ளாமல் வாழ்ந்து வந்துள்ளார் மகேஸ்வரி. அவருடன் வாழ பிடிக்காமல் உறவினர் பையனான கவுதம் என்பவரை குருநாதசேதுபதி உதவியுடன் கல்யாணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த ஜெயக்குமார் மகேஸ்வரிக்கு உதவிய குருநாதசேதுபதியை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார். இதையடுத்து மகஸ்வரியின் சகோதரி பஞ்சவர்ணம் உள்ளிட்ட சிலருடன் சேர்ந்து குருநாதசேதுபதியை ஆயுதப்படை மைதானம் அருகே தீர்த்துக் கட்டினார் ஜெயக்குமார். 

arrest

இந்த வழக்கில் சிலைமான் அருகே பூஞ்சுத்தி கிராமத்தில் பதுங்கி இருந்த ஜெயக்குமார், பஞ்சவர்ணம், அம்பிகாவதி, விஜயபாண்டி, ரமேஷ், விக்னேஷ், கோடி கிருஷ்ணா, முனீஸ்வரன், ராஜ்மோகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. பெண்கள் பிரச்சனை என கண்ணீர் விடும்போது போலீசாருக்கு தெரிவித்து உதவி செய்திருந்தால் குருநாதசேதுபதி கொல்லப்பட்டிருக்க மாட்டார் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இன்னொருத்த பிரச்சனையில் தேவை இல்லாமல் மூக்கை நுழைத்து உதவி செய்ததால் குருநாதசேதுபதியை இழந்து அக்குடும்பம் தவிக்கிறது.