இன்னைக்கு ‘ரீ -கிப்ட்டிங் டே’வாம்…! என்னாங்கடா ஒங்களோட பெரிய அக்கப்போறா இருக்கு..!?

இன்னைக்கு ‘ரீ -கிப்ட்டிங் டே’வாம்…! என்னாங்கடா ஒங்களோட பெரிய அக்கப்போறா இருக்கு..!?

பொதுவாகவே நமக்கு வந்த பரிசு பொருட்கள் நமக்கு பிடிக்கவில்லை என்றாலோ,யூஸ் பண்ண முடியாததா பொருளாக இருந்தாலோநம்ம ஆட்கள் அப்படியே நைஸா அடுத்து வர்ற ஃபங்க்ஷன்ல கிஃப்ட் பார்சல் பண்ணிகொடுக்கிறது வழக்கம்.இது பற்றி தெரியும் நண்பர்கள் சம்பந்தப்பட்ட நபரை கஞ்சூஸ் என்று கிண்டலடிப்பதும் உண்டு.ஆனால் அமெரிக்காவில் இப்படி தங்களுக்கு வந்த பரிசு பொருள்களை மற்றவர்களுக்கு திருப்பி தருவதையே ஆண்டில் ஒரு சிறப்பு நாளாக கொண்டாடுகிறார்கள்.இதென்ன கிறுக்குத்தனம் என்று கேட்கிறீர்களா..!? 

day

இந்த ‘ஸ்பெஷல் டே’ கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்பு கொண்டாடப்படுகிறது. 2008-ல் கொலோராடோவின் கவர்னர் டிசம்பர் 19 நேஷனல் ரீ-கிப்ட்டிங் டே வாக அறிவித்தார்.மேலும் இந்நாளை அங்கு விடுமுறை தினமாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.இந்த தினத்தை, அங்கு கடன் ஆலோசனை குழு என்றும் பணம் மேலாண்மை சர்வதேசம்(MMI-Money Management International) தேசிய மறுசீரமைப்பு நாள் என்றும் வைத்துக்கொள்ளலாம் என்கிறார்கள்.

day

இந்த நாளை ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடுகிறார்கள். தவிர,புள்ளிவிவரப்படி, 40% பரிசு பொருள்கள் உபயோகப்படுத்தாமல் இருப்பதையே  மற்றவர்களுக்கு ரீ-கிப்ட் ஆககொடுக்கிறார்கள். 14% மக்கள் இப்படி தங்களுக்கு வந்த பொருட்களை மீண்டும் அடுத்தவர்களுக்கு  ரீ கிப்ட் கொடுப்பதை கௌரவமான செயலாகவும் நம்புகிறார்கள்.

யாருக்கு என்ன பிடிக்கும் என்று தெரியாமலும் ஒரே மாதிரியான பரிசு பொருள்களை பலரும் வாங்கி , பிறந்தநாள், சிறப்பு தினம் என்று கொடுப்பார்கள்.அப்படி உங்களுக்கு வந்த பரிசுகளை பிறருக்கு ரீ-கிப்ட் செய்யும்போது உங்களுக்கு பயன்படாதவைகளாய்  இருக்கும் பொருள் பிறருக்கு பயன்படும் பொருளாகின்றன! அதுதான் இன்றைய நாளின் சிறப்பு.

gift

ரீ-கிப்ட் செய்வதற்கும் சில விதிகளும் இருக்கிறன்றன அவைகளை மனதில் கொண்டு ரீ-கிப்ட் செய்தல்வேண்டும் இல்லையென்றால் பிரச்சனைகளில் முடியவும் வாய்ப்புள்ளது! 

1. உங்களுக்கு ஒரு பொருள் உபயோகம் இல்லையென்றாலோ, வேண்டாதவையாக இருந்தால் மட்டுமே அதனை ரீ-கிப்ட் செய்யவேண்டும்.

2. நீங்கள் அந்த பொருளை ஒரு முறைகூட யூஸ் பண்ணாதவைகளாய் இருத்தல் வேண்டும், அதன் பேக்கிங்கும் சரியாய் இருத்தல் வேண்டும்.

gift

3. உங்களுக்கு அன்போடு வாங்கிக்குடுத்த பொருளை பிறருக்கு தரக்கூடாது , இப்படி செய்தல் உங்களுக்கு கிப்ட் செய்தவரை நீங்கள் காயப்படுத்தும் செயலாகும்.

4. மற்றவர்களுக்கு ஃகிப்ட் கொடுக்கும் போது ரொம்பவும் சுமாரான பொருகளை ஒரு போதும் கொடுக்கக் கூடாது. 

gift

5. மேலும் இதில் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம் நீங்கள் ரீ-கிப்ட் செய்யும் நபர் உங்களுக்கு முதலில் கிப்ட் செய்த நபரிடம் சென்று போட்டுக்கொடுத்திரக் கூடாது. 

ஸோ.. ரீ-கிப்ட் செய்யும் முன் ஒண்ணுக்கு ரெண்டு முறை யோசித்து யாருக்கு என்ன ஃகிப்ட் உபயோகப்படும் என்பதை அறிந்து யார் மனதையும் காயப்படுத்தாமல் இருத்தல் மிகவும் அவசியம்! எதைச் செஞ்சாலும் ப்’ளான் பண்ணிச் செய்யணும்’! !