இன்னைக்கு எழுதி வைச்சுகோங்க… அடுத்த 6 வருஷத்துல அமேசான் நிறுவனர் ஜெப் பிசோஸ்தான் உலகின் முதல் டிரில்லியனர்…

 

இன்னைக்கு எழுதி வைச்சுகோங்க… அடுத்த 6 வருஷத்துல அமேசான் நிறுவனர் ஜெப் பிசோஸ்தான் உலகின் முதல் டிரில்லியனர்…

2026ம் ஆண்டுக்குள் உலகின் முதல் டிரில்லியனராக அமேசான் நிறுவனர் ஜெப் பிசோஸ் உருவெடுப்பார் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

1 லட்சம் கோடி அமெரிக்கா டாலருக்கு அதாவது இந்திய மதிப்புக்கு சுமார் ரூ.75 லட்சம் கோடிக்கு அதிகமாக நிகர சொத்து மதிப்பு கொண்டவர்களை டிரில்லியனர் என்ற அழைக்கப்படுவர். உலகில் இதுவரை யாரும் டிரில்லியனர் அந்தஸ்தை இன்னும் எட்டவில்லை. ஆனாலும் வரும் ஆண்டுகளில் ஒரு சிலர் டிரில்லியனர் அந்தஸ்தை எட்டிவிடுவார்கள் என கணிப்புகள் வெளியாகியுள்ளது.

சூ ஜியாயின்

டிரில்லியனர் தொடர்பான ஆய்வை ஆய்வு நிறுவனமான கம்பாரிசன் மேற்கொண்டது. என்.ஒய்.எஸ்.இ.யில் மதிப்புமிக்க நிறுவனங்களின் சந்தை மதிப்பு மற்றும் போர்ப்ஸின் டாப் 25 மெகாகோடீஸ்வரர்கள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தது. கம்பாரிசன் ஆய்வின்படி, அமேசான் நிறுவனர் ஜெப் பிசோஸ் தனது 62 வயதில் அதாவது 2026ம் ஆண்டுக்குள் உலகின் முதல் டிரில்லியனர் அந்தஸ்தை எட்டுவார் என கணிக்கப்பட்டுள்ளது.

முகேஷ் அம்பானி

56 வயதாகும் ஜெப் பிசோஸின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.10.72 லட்சம் கோடியாக உள்ளது. இன்னும் 7 ஆண்டுக்குள் ஜெப் பிசோஸின் சொத்து மதிப்பு 7 மடங்குக்கு அதிகரிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. சீன ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சூ ஜியாயின் உலகின் இரண்டாவது டிரில்லியனராக வருவார் என கணிக்கப்பட்டுள்ளது. நம்ம ஊரு முகேஷ் அம்பானி 2033ம் ஆண்டுக்குள் உலகின் 5வது டிரில்லியனராக இருப்பார் என அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.