இன்னும் 20 நாளுதான் இருக்கு…… பி.எஸ்.4 வாகனங்களை காலி செய்ய முடியாதே…..பயத்தில் வாகன டீலர்கள்….

 

இன்னும் 20 நாளுதான் இருக்கு…… பி.எஸ்.4 வாகனங்களை காலி செய்ய முடியாதே…..பயத்தில் வாகன டீலர்கள்….

மார்ச் 31ம் தேதிக்குள் கையிருப்பில் உள்ள பி.எஸ்.4 ரக வாகனங்களை விற்பனை செய்ய முடியாது என்ற பயத்தில் வாகன டீலர்கள் உள்ளதாக வாகன டீலர்கள் சங்கங்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் பி.எஸ்.6 ரக வாகனங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவு அமல் வருகிறது. இம்மாதம் 31ம் தேதி வரை மட்டுமே பி.எஸ்.4 ரக வாகனங்களை விற்பனை செய்ய முடியும். இதனை கருத்தில் கொண்டு சென்ற ஆண்டை பெரும்பாலான வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பி.எஸ்.6 ரக வாகனங்களை தயாரித்து விற்பனை கொண்டு வந்து விட்டன. இருப்பினும் வாகன டீலர்களிடம் பி.எஸ்.4 ரக வாகனங்கள் கையிருப்பு கொஞ்சம் உள்ளது.

எப்.ஏ.டி.ஏ.

வாகன டீலர்கள் சங்கங்கள் கூட்டமைப்பு இது குறித்து கூறுகையில், கையிருப்பில் உள்ள பி.எஸ்.4 வாகனங்களை மார்ச் 31ம் தேதிக்குள் விற்பனை செய்ய முடியாது என்ற பயத்தில் வாகன டீலர்கள் உள்ளனர். அதற்கு முதல் காரணம் என்னவென்றால், பி.எஸ்.4 வாகனங்கள் பதிவு நடைமுறையை மார்ச் 31ம் தேதிக்குள் முடிக்கும்படி பல மாநில அரசுகள் சுற்றறிக்கை விட்டுள்ளன. அடுத்து கொரோனா வைரஸ் காரணமாக வாடிக்கையாளர்கள் வாகன ஷோரூம்கள் பக்கம் கூட வருவதில்லை என தெரிவித்தது.

வாகன ஷோரூம்

பொதுவாக லேட்டஸ்ட் வாகனங்களைதான் வாங்க வாடிக்கையாளர்கள் வாங்க விருப்பப்படுவார்கள் அதனால் பி.எஸ்.4 வாகனங்களை வாங்குவதை காட்டிலும் பி.எஸ்.6 வாகனங்களை வாங்கத்தான் அதிக முன்னுரிமை கொடுப்பார்கள். இதனால் மத்திய அரசின் டெட்லைன் முடிவடைதற்கு இன்னும் கொஞ்சம் நாட்களே உள்ளதால் கையிருப்பில் உள்ள பி.எஸ்.4 வாகனங்களை விற்பனை செய்ய முடியாது என்ற பயம் வாகன டீலர்களுக்கு இருக்கலாம்.